Thursday, May 9, 2024
Home » கடந்த ஆண்டின் மீளாய்வு: 2023 இல் இலங்கையில் Uber தளத்தின் செயல்பாடுகள்

கடந்த ஆண்டின் மீளாய்வு: 2023 இல் இலங்கையில் Uber தளத்தின் செயல்பாடுகள்

by Rizwan Segu Mohideen
February 15, 2024 11:27 am 0 comment

2023 ஆண்டிற்கான தனது செயல்பாடுகள் தொடர்பான மீளாய்வை ‘இலங்கையில் Uber எவ்வாறு செயல்பட்டுள்ளது’ என்ற தனது வருடாந்த புள்ளிவிபரங்கள் அறிக்கை மூலமாக அது வெளியிட்டுள்ளதுடன், கடந்த ஆண்டில் இலங்கையில் தனது பிரயாண சேவை தொடர்பான முக்கிய போக்குகளை இதில் உள்ளடக்கியுள்ளது.   

2023 இல் மேற்கொள்ள சவாரிகள் தொடர்பான பகுப்பாய்வு, ஒவ்வொரு நகரத்திலும் Uber சவாரிகள் மூலமாக உள்ளடக்கப்பட்ட மொத்த கிலோமீட்டர் எண்ணிக்கை தொடர்பான போக்குகள், நகரங்களுக்கு இடையிலான பிரபலமான பிரயாண போக்குகள் மற்றும் சவாரி செய்பவர்களின் பல்வேறுபட்ட முன்னுரிமைத் தெரிவுகள் ஆகியன இந்த அறிக்கை மூலமாக வெளிப்பட்டுள்ளன. புள்ளி விபரங்கள் மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றின் துணையுடன், இலங்கையில் சவாரிப்பகிர்வு முறைமையை நாடுவது அதிகரித்து வருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   

நாட்டில் சவாரி செய்பவர்களின் அபிமானம் பெற்ற தெரிவாக Uber தொடர்ந்தும் காணப்படுவதுடன், பல்வேறுபட்ட சவாரித் தெரிவுகள் மீது சவாரி செய்பவர்கள் காண்பித்த அபிமானமும் வெளிப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 140 மில்லியன் கிலோமீட்டர் என்ற பாரிய எண்ணிக்கையில் மொத்த சவாரிகளும் இடம்பெற்றுள்ளதுடன், இது இலங்கையிலுள்ள ஒட்டுமொத்த வீதி வலையமைப்பின் 114,000 கிலோ மீட்டர் தூரத்தைக் கருதுகையில், 1,200 க்கும் மேற்பட்ட தடவைகள் அல்லது தினந்தோறும் மூன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் இலங்கையிலுள்ள ஒட்டுமொத்த வீதி வலையமைப்பையும் கடப்பதற்கு ஈடானதாக கருத முடியும்.   

Uber Tuk மற்றும் Uber Zip ஆகியன நாட்டில் தொடர்ந்தும் பிரபலமான சேவை வகைகளாக காணப்பட்டதுடன், இரண்டுக்கும் இடையில் பலத்த போட்டி நிலவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Uber Moto அல்லது வாடகை மோட்டார் சைக்கிள்கள் சவாரிகள் 2023 ஆம் ஆண்டில் மிக வேகமாக வளர்ச்சி கண்ட சேவை வகையாக காணப்பட்டன. பாரம்பரியமாக வீதிகளில் பிரயாணிக்கின்ற முச்சக்கர வண்டிகள் சவாரிகளுக்காக கிடைக்கப்பெறுகின்ற போதிலும் இச்சேவைத் தளத்தினூடாக முச்சக்கர வண்டிகளை முற்பதிவு செய்தமை இலங்கை மக்கள் மத்தியில் Tuk மற்றும் Moto சேவைகள் மீதான நேசம் அதிகரித்து வருகின்றமைக்கு சான்று பகருகின்றது. அத்துடன் கட்டுபடியான போக்குவரத்து தெரிவுகளை அவர்கள் நாடுவதும் இதன் மூலமாக புலப்படுகின்றது.  

2023 ஆம் ஆண்டில் அதிகூடிய எண்ணிக்கையான Uber சவாரிகள் இடம்பெற்ற நகரமாக தொடர்ந்தும் கொழும்பு முன்னிலை வகிப்பதுடன், குறிப்பாக திம்பிரிகஸ்யாய பிரதேச செயலர் பிரிவில் வணிக மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் காரணமாக அதிகூடிய எண்ணிக்கையான சவாரிகள் இடம்பெற்ற பிரதேசமாக காணப்பட்டது. மிகவும் ஆச்சரியமளிக்கும் வகையில், அதிகூடிய பின்னிரவு சவாரிகள், அதிகூடிய வார இறுதி சவாரிகள் மற்றும் அலுவலக நேரத்தில் இடம்பெற்ற அதிகூடிய எண்ணிக்கையான சவாரிகள் இடம்பெற்ற பிரதேசமாக திம்பிரிகஸ்யாய பிரதேச செயலர் பிரிவு காணப்பட்டது.  

‘இலங்கையில் 2023 இல் Uber எவ்வாறு செயல்பட்டுள்ளது’ என்ற அறிக்கையின் சுருக்கமான புள்ளிவிபரத் தொகுப்புக்கள் பின்வருமாறு:

  • அனேகமான Uber சவாரிகள் பதிவு செய்யப்பட்ட நேரம் பிப 5 மணி முதல் பிப 6 மணி வரை
  • வாரத்தில் Uber சவாரி பதிவு செய்யப்பட்ட மிகவும் பிரபலமான தினம் வெள்ளிக்கிழமை
  • அதிகூடிய எண்ணிக்கையில் Uber சவாரிகள் இடம்பெற்ற மாதமாக டிசம்பர் காணப்பட்டதுடன், நத்தார் வார இறுதி, போயா பூரணை தினம் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இதற்கு காரணமாக அமைந்துள்ளன
  • கொண்டாட்டங்களுக்கு முன்னரும், மற்றும் விடுமுறைக்காக வெளியில் செல்வதற்கும் இலங்கை மக்கள் தாம் தொழில் புரிகின்ற நகரங்களிலிருந்து தமது சொந்த பிரதேசங்களுக்கு பிரயாணம் செய்ததை கருதும் போதும், அதிகூடிய எண்ணிக்கையில் சவாரிகள் பதிவு செய்யப்பட்ட தினமாக 2023 டிசம்பர் 22 காணப்பட்டது.  
  • கொழும்பின் விருப்பத்திற்குரிய வார இறுதி விடுமுறைகளைக் கருத்தில் கொள்கையில், அதன் பிரபலமான Uber Intercity மூலமாக மிகவும் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா மேற்கொள்ளப்பட்ட பிரதேசமாக தென் பகுதி காணப்பட்டது.

இலங்கையில் அதிக எண்ணிக்கையான சவாரிகள் இடம்பெற்ற முக்கிய நகரங்கள்

  1. கொழும்பு
  2. மகரகம
  3. தெகிவளை
  4. கடுவெல
  5. கெஸ்பாவ  

இலங்கையில் அதிக எண்ணிக்கையில் நகரங்களுக்கு இடையிலான சவாரிகள் இடம்பெற்ற முக்கிய நகரங்கள்

  1. பேருவளை
  2. வெலிகம
  3. காலி
  4. பெந்தோட்டை
  5. ஹபராதுவ

நகரங்களுக்கு இடையிலான சவாரிகளின் போக்குகளை உற்றுநோக்கும் போது, இலங்கையின் அழகிய கடற்கரைகளை அனைவரும் நேசிக்கின்றனர் என்ற நாம் அனைவரும் அறிந்துள்ள உண்மை புலப்படுகின்றது. பெரும்பான்மையாக இடம்பெற்ற நகரங்களுக்கு இடையிலான சவாரிகளை கருதுகளை முதல் 5 இடங்களில் தாராளமான சூரிய பிரகாசமும், மணலும் நிறைந்த வார இறுதி விடுமுறை கடற்கரை நகரங்கள் இடம்பெற்றுள்ளன.   

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT