Home » தரமற்ற மின் வேலிகளால் யானைகள் உயிரிழப்பு அதிகம்

தரமற்ற மின் வேலிகளால் யானைகள் உயிரிழப்பு அதிகம்

- கடந்த 25 நாட்களில் 12 யானைகள் பலி

by Rizwan Segu Mohideen
January 26, 2024 7:58 am 0 comment

தரமற்ற மின்சார வேலிகளால் காட்டு யானைகள் உயிரிழந்த பல சம்பவங்கள் கடந்த காலத்தில் பதிவாகியதாகவும் இந்த வருடத்தின் 25 நாட்களில் 12 யானைகள் உயிரிழந்ததாகவும், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்தது.

கடந்த வருடத்தில் சுமார் 470 காட்டு யானைகள் உயிரிழந்ததாகவும் அவற்றில் 50 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்தது.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் தரம் குறைந்த மின்சார வேலிகளை ஆய்வு செய்யும் வேலைத்திட்டம் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கமைய ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், தரமற்ற மின்சார வேலிகளால் காட்டு யானைகள் உயிரிழந்தமை கடந்த காலத்தில் பதிவாகியவதால் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தரமற்ற மின்சார வேலிகளை அகற்றி தரமானதாக அவற்றை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT