Monday, April 29, 2024
Home » புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, நல் எண்ணங்கள் உருவாகட்டும்

புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, நல் எண்ணங்கள் உருவாகட்டும்

மருதபாண்டி ரமேஸ்வரன்

by damith
January 15, 2024 9:39 am 0 comment

தைத் திருநாளாம் தைப்பொங்கலை கோலாகலமாக கொண்டாடும் அனைத்து இந்துப் பெரு மக்களுக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் விடுத்துள்ள தைத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

உழவர்களின் அறுவடைத் திருநாளாம் தைத்திருநாள் அன்று மகர சங்கராத்தியம் கொண்டாடப்படுகின்றது. சூரியனுடைய வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய பயணம்தான் மகர சங்கராத்தியம் என்று சொல்லுகின்றார்கள். எமக்கு மழையையும் வெயிலையும் கொடுத்து உதவுகின்ற சூரியனுக்கு சூரியப் பொங்கல் வைத்து நன்றி செலுத்துகின்ற ஒரு திருநாளாக இத்தைப் பொங்கல் அமைகின்றது. பொங்கல் பொங்கி வருகின்றபோது நாம் அனைவரும் சௌபாக்கியமாக வாழ்வதாக ஐதீகம் சொல்கின்றது. பொங்கல் பலவிதமானது. கோலிப் பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என பல விதமான பொங்கல்களைக் கொண்டாடுகின்றோம்.

எனவே, தொழிலாளர்களின் வாழ்க்கையில் தீமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஒவ்வொருவரதும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் அழுத்தங்களையும் வெற்றிபெறச் செய்து எம்மில் பல நல்ல வகையான மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுக்கவும் மேலும் மக்களிடையே புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு போன்ற எண்ணங்கள் உருவாகி எமது மக்கள் சிறப்பாக வாழ்வதற்கு எல்லா வல்ல இறைவனை பிரார்த்திப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT