Sunday, April 28, 2024
Home » கொட்டும் மழைக்கு மத்தியிலும் கிழக்கில் தொடரும் தீவிர போதைவஸ்து வேட்டை!

கொட்டும் மழைக்கு மத்தியிலும் கிழக்கில் தொடரும் தீவிர போதைவஸ்து வேட்டை!

by sachintha
January 12, 2024 6:00 am 0 comment

சமூகவிரோதிகளை ஒடுக்கும் நோக்குடனான சோதனை நடவடிக்ைகக்கு மக்கள் மத்தியில் முழுமையான ஆதரவு

டெங்கும் போதைப்பொருளை ஒழிக்கும் நோக்குடன் பொலிசார் முன்னெடுத்து வருகின்ற ‘யுக்திய’ விசேட நடவடிக்ைகயானது கிழக்கில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாடுபூராகவும் இலங்கை போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பிரிவு, இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து நடத்தும் போதைப்பொருள் வேட்டையானது கிழக்கின் பல இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றது. மட்டக்களப்பு_ ஆரையம்பதி பிரதான வீதியிலும் இவ்விதமான சோதனை நடத்தப்பட்டதைக் காண முடிந்தது. காத்தான்குடி போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பிரிவினர், காத்தான்குடி பொலிசார், காத்தான்குடி வீதிப்போக்குவரத்து பிரிவினர் மற்றும் மட்டக்களப்பு விஷேட அதிரடிப்படையினர் இணைந்து இவ்வாறான தீவிர சோதனையை நடத்தியதைக் காண முடிந்தது.

இ.போ.ச மற்றும் தனியார் பஸ்கள், முச்சக்கர வண்டிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் கடுமையாக சோதனையிடப்பட்டன.

அவற்றில் பயணம் செய்த பயணிகள் வசமிருந்த உடைமைகள் முற்றாக சோதனைக்குட்படுத்தப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டம் தற்போது மழைவெள்ளத்தால் பாதிப்புற்று இயல்புநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இவ்வாறான சீரற்ற காலநிலையைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் போதைவஸ்துக் கடத்தலில் ஈடுபடலாமென்ற சந்தேகத்திலேயே இவ்வாறான சோதனை நடவடிக்ைக மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மழை வெள்ளம் பாராது போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பிரிவினர் கூடாரம் அமைத்து சோதனையிட்டு வருகின்றனர். வெள்ளம் நிலவுகின்ற இன்றைய காலப்பகுதியில் இவ்வாறான சோதனைகள் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும், போதைப்பொருளை ஒழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படுகின்ற இந்நடவடிக்ைகக்கு மக்கள் முழுமையான ஆதரவு தெரிவிப்பதைக் காண முடிகின்றது.

போதைப்பொருளை ஒழிக்கும் நடவடிக்ைகக்கு ஆதரவு வழங்க வேண்டியது மக்களின் தலையாய கடமையாகும் என்று மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

வாஹிட் முகம்மது ஜெஸீல்

(அம்பாறை நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT