Saturday, April 27, 2024
Home » UPDATE: Sri Lanka vs Zimbabwe ; மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது

UPDATE: Sri Lanka vs Zimbabwe ; மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது

- தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட போட்டி

by Prashahini
January 6, 2024 8:38 pm 0 comment

UPDATE: முதலாவது ஒருநாள் போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள்போட்டி தற்சமயம் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Charith Asalanka 101 ஓட்டங்களையும், அணியின் தலைவர் Kusal Mendis 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் சிம்பாவே அணி சார்பில் Richard Ngarava, Blessing Muzarabani, Faraz Akram, ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதன்படி சிம்பாவே அணிக்கு 274 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சிம்பாவே அணி பதிலுக்கு துடுப்பாடி வந்த நிலையில் போட்டி மழைக் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

போட்டியில் மழை குறுக்கிடும் போதும் சிம்பாவே அணி 4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 12 ஓட்டங்களை பெற்றிருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT