Sunday, April 28, 2024
Home » விமான படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தி

விமான படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தி

- சுமார் 8 மில்லியன் ரூபா செலவில் இலங்கை விமானப் படையினரால் வேலை திட்டம்

by Prashahini
January 6, 2024 6:53 pm 0 comment

இலங்கை விமான படையின் 73 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 73 பாடசாலைகளை புனரமைக்கும் வேலை திட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று (06) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுமார் 8 மில்லியன் ரூபா செலவில் இலங்கை விமானப் படையினரால் மேற்கொள்ளப்படும் மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலய புனரமைப்பிற்கான அடிக்கல் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸினால் நாட்டி வைக்கப்பட்டது.

இதன்போது பாடசாலைக்காக ஒரு தொகுதி புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

விமானப்படையின் வான்வெளிப் பொறியியல் துறையின் பணிப்பாளர் நாயகம் ஏயார் வைஸ் மார்சல் முதித்த மஹவத்தகே, திட்ட இணைப்பாளர் குரூப் கப்டன் துஷார பண்டார,விமானப் படையின் பலாலி படைத்தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் சமிந்த ஹேரத் , விமான படையின் அதிகாரிகள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி துறைசார் அதிகாரிகள் , மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT