Sunday, April 28, 2024
Home » கடமைக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியருக்கு விசேட விடுமுறை
சீரற்ற காலநிலை, வெள்ளம், மண்சரிவு

கடமைக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியருக்கு விசேட விடுமுறை

by Gayan Abeykoon
December 28, 2023 7:22 am 0 comment

கடந்த காலத்தில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரசாங்க ஊழியர்களின் வேலை நாட்களை விசேட விடுமுறை தினங்களாக பதிய பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்து, சுற்றறிக்கையும் வெளியிட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்படும் விசேட விடுமுறைகள் விடுப்புப் பதிவேட்டில் முறையாக பதியப்பட வேண்டுமெனவும் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அவ்வமைச்சு அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரசாங்க ஊழியர்களுக்கு மாத்திரமே இந்த விசேட விடுமுறை செல்லுபடியாகும். விசேட விடுமுறையை பெற்றுக்கொள்வதற்காக, கடமைக்கு சமூகமளிக்க முடியாமைக்கான காரணத்தை குறிப்பிட்டு கடிதமொன்றை பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலரின் கையொப்பத்துடன் திணைக்களத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர், உரிய திணைக்களத் தலைவர் கடிதத்தை பரிசீலித்து, விசாரித்த பின்னர் இவ்விசேட விடுமுறை வழங்கப்படுமெனவும், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவித்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT