Saturday, April 27, 2024
Home » சம்பியனானது குட்நிக் அணி

சம்பியனானது குட்நிக் அணி

by gayan
December 14, 2023 2:28 pm 0 comment

விநாயகபுரம் விளையாட்டுக் கழகத்தின் 45 வருட நிறைவினை முன்னிட்டு நடைபெற்ற மின்னொளி உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் குட்நிக் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைந்த இறுதிப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்ட குட்நிக் அணி பெனால்டி சூட் அவுட் முறையில் 4–3 என்ற கோல்களால் வெற்றியீட்டியது. போட்டியில் முழு நேர முடிவின்போது இரு அணிகளும் கோல் பெறாத நிலையிலேயே பெனால்டி சூட் அவுட் முறை பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒலுவில் கிழக்கு தினகரன், மாளிகைக்காடு குறூப் நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT