Saturday, April 27, 2024
Home » தமது கூட்டாண்மையை புதுப்பித்துள்ளது Coca-Cola மற்றும் Sathosa

தமது கூட்டாண்மையை புதுப்பித்துள்ளது Coca-Cola மற்றும் Sathosa

by Rizwan Segu Mohideen
December 13, 2023 3:18 pm 0 comment

இலங்கை முழுவதும் Coca-Cola தயாரிப்புகளின் கிடைக்கும் தன்மை மற்றும் அணுமுறையை மேம்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, Coca-Cola Beverages Sri Lanka (CCCBSL) மற்றும் Lanka Sathosa Limited ஆகியவை அக்டோபர் 30, 2023 முதல் தங்களது கூட்டாண்மையை புதுப்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. Sathosaவின் பரந்த வலையமைப்பான 430+ நாடு முழுவதிலுமுள்ள விற்பனை நிலையங்களில் பல்வேறு வகையான Coca-Cola தயாரிப்புகள் கிடைப்பதை இந்த கூட்டாண்மை உறுதி செய்கிறது.

இந்த கூட்டாண்மை புதுப்பிப்பதற்கான கையொப்பமிடும் நிகழ்வில் Coca-Cola Beverages Sri Lanka (CCBSL) மற்றும் Sathosa Lanka Limited ஆகிய இரு நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர், இது புதுப்பிக்கப்பட்ட கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. CCBSLஐ பிரதிநிதித்துவப்படுத்தி முகாமைத்துவ பணிப்பாளர் – Pradeep Pandey, பணிப்பாளர் நிதி – Rajeev Tandon, வர்த்தக பணிப்பாளர் – Prashant Kumar, முக்கிய கணக்குகள் மற்றும் நவீன வர்த்தகம், WS & Southern Region தலைவர் – Tania Karunaratne, முக்கிய கணக்கு முகாமையாளர் – Chamil De Silva மற்றும் உதவி  வர்த்தக சந்தைப்படுத்தல் முகாமையாளர் – Oshani Ganegoda. Sathosa நிறுவனத்தின் தலைவர் Pasanda Yapa Abeywardena, பிரதம நிறைவேற்று அதிகாரி Sampath Senawatte, பிரதிப் பொது முகாமையாளர் கொள்வனவு – Roshari Sahajeewani மற்றும் பிரதிப் பொது முகாமையாளர் நிதி – Channa Kevitiyagala ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களின் இருப்பு இந்த கூட்டான்மையின் தொடர்ச்சியான வெற்றிக்கு இரு அமைப்புகளின் கூட்டு மனப்பான்மை மற்றும் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

நீட்டிக்கப்பட்ட கூட்டாண்மை குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய CCBSL இன் முகாமைத்துவப் பணிப்பாளர் Pradeep Pandey, “சதொசவின் சிறப்பான செயல்திறன் மற்றும் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில், சதொசவுடனான எங்களது ஒத்துழைப்பைத் தொடர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தொலைதூரப் பகுதிகள் உட்பட சதொச விற்பனை நிலையங்களின் பரவலான சேவை, எங்கள் நுகர்வோரை திறம்பட சென்றடைவதற்கு கருவியாக உள்ளது. இந்த மதிப்புமிக்க கூட்டாண்மையை மேலும் மேம்படுத்த நாங்கள் எதிர்நோக்குகிறோம்.” என தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சதொசவின் தலைவர் Pasanda Yapa Abeywardena மேலும் தெரிவிக்கையில், “இந்த கூட்டாண்மையின் தொடர்ச்சியானது, பல்வேறு சமூக-பொருளாதார பின்னணியில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் தரமான தயாரிப்புகளை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. வாடிக்கையாளர் அனுபவத்தை உயர்த்தும் மற்றும் CCBSL உடனான எங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புத்தாக்கமான உத்திகள் மற்றும் கூட்டு பிரச்சாரங்களை ஆராய நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.” என தெரிவித்தார்.

அவர்களின் கூட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக, CCBSL மற்றும் Sathosa ஆகியவை ஒருங்கிணைந்த விளம்பர பிரச்சாரங்களை செயல்படுத்தவும், மூலோபாய ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் குளிரூட்டிகளை நிறுவவும், தற்போதைய மேம்பாடுகளுக்கு மதிப்புமிக்க வாடிக்கையாளர் கருத்துக்களை சேகரிக்கவும் திட்டமிட்டுள்ளன. இந்த நீடித்த கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த புத்தாக்கமான சந்தைப்படுத்தல் உத்திகள் மற்றும் கூட்டு ஒத்துழைப்புகளை ஆராயும் பயணத்தை நிறுவனங்கள் தொடங்க உள்ளன.

இரு நிறுவனங்களும் இந்த புதுப்பிக்கப்பட்ட பயணத்தைத் தொடங்கும்போது, மலிவு, அணுகல் மற்றும் வாடிக்கையாளர் திருப்தியின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த நீடித்த கூட்டாண்மை தொடர்ச்சியான வளர்ச்சியை எதிர்பார்க்கிறது மற்றும் நாடு முழுவதும் உள்ள நுகர்வோரின் மாறும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான புதிய வழிகளை ஆராய்கிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT