Saturday, April 27, 2024
Home » பாடசாலை கிரிக்கெட் போட்டி: கல்முனை ஸாஹிரா வெற்றி

பாடசாலை கிரிக்கெட் போட்டி: கல்முனை ஸாஹிரா வெற்றி

by gayan
December 10, 2023 4:38 pm 0 comment

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சம்மேளனம் நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 13 வயதுக்குட்பட்ட பிரிவு மூன்று கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அம்பாறை டி.எஸ். சேனநாயக்க தேசிய கல்லூரி அணியை கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

காரைதீவு விபுலானந்த தேசிய பாடசாலை மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய அம்பாறை டீ.எஸ். சேனநாயக தேசிய கல்லூரி அணி 41 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 112 ஒட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்படுத்தாடிய கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி அணி 34 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ஒட்டங்களை பெற்று 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT