Saturday, April 27, 2024
Home » Hemas Hospitals மற்றும் Mediclinic இணைந்து வெள்ளவத்தை மற்றும் அதற்கு அப்பால் சுகாதார சேவைகளை மேம்படுத்தவுள்ளன  

Hemas Hospitals மற்றும் Mediclinic இணைந்து வெள்ளவத்தை மற்றும் அதற்கு அப்பால் சுகாதார சேவைகளை மேம்படுத்தவுள்ளன  

by Rizwan Segu Mohideen
November 20, 2023 11:17 am 0 comment

இலங்கையில் மிகவும் நேசிக்கப்படும் வைத்தியசாலையாகவும் மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுகாதார சேவையில் முன்னோடியாகவும் உள்ள ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ், வெள்ளவத்தையின் மையப்பகுதியில் சுகாதாரப் பராமரிப்பிற்கான நிகரற்ற புகலிடத்தை ஸ்தாபிப்பதற்காக மெடி கிளினிக் (பிரைவேட்) லிமிட்டெட் உடன் கைகோர்த்து, அனைத்தையும் முற்றிலும் மாற்றியமைக்கும் வலுகொண்ட முயற்சியில் கால்பதித்துள்ளது. இந்த முக்கிய கூட்டாண்மையானது விரிவான மருத்துவ சேவையின் புதிய சகாப்தத்தை வெளிப்படுத்துவதுடன், சமூகத்தின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரே கூரையின் கீழ் பலதரப்பட்ட சேவைகளை நெறிப்படுத்துகிறது.

அனைத்து சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ளக்கூடிய கோட்பாட்டின் கீழ், தலைசிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்கான அவர்களின் ஓயாத அர்ப்பணிப்பில், ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் மற்றும் மெடி கிளினிக் இணைந்து மருத்துவ நிபுணத்துவம், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் கனிவான பராமரிப்பு ஆகியவற்றின் இனிமையான கலவையை உருவாக்கியுள்ளன. வெள்ளவத்தை மற்றும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் உள்ள நோயாளர்கள் பரந்த அளவிலான சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இந்த ஒத்துழைப்பானது உறுதி செய்வதுடன், இவை அனைத்தும் ஒரே இடத்தில் அமையப்பெற்றுள்ள அதிநவீன சேவை மையத்தில் சௌகரியமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இங்கு மேன்மை என்பதே விதிமுறை மற்றும் சௌகரியத்திற்கே அதிகூடிய முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் மற்றும் மெடி கிளினிக் இடையேயான கூட்டாண்மையானது மேற்குறிப்பிட்ட இலக்கினை யதார்த்தமாக மாற்றுகிறது. 24 மணி நேரமும் (காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை) நீட்டிக்கப்பட்ட வெளிநோயாளர் சிகிச்சை சேவைகள் மற்றும் முழு அளவிலான மருந்தகம் முதல் நீட்டிக்கப்பட்ட அளவில் பகல்நேர மருத்துவ ஆலோசனை, காயத்திற்கான விசேட சிகிச்சை மையங்கள், விரிவான சுகாதார ஆய்வு மதிப்பீடுகள், நவீன ஆய்வுகூட சேவைகள், எக்கோ காடியோ கிராம் (ECG) வசதிகள் மற்றும் விசேட கண் மற்றும் பல் பராமரிப்பு ஆகியவற்றுடன், இந்த கூட்டு முயற்சியானது உங்கள் ஆரோக்கிய பயணத்திற்கான அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.  

ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ், நாட்டில் மிகவும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற வைத்தியசாலைச் சங்கிலி என்ற தனித்துவமான பெருமையை வைத்திருப்பதுடன், மேன்மைக்கான ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. மதிப்புமிக்க ACHSI அங்கீகாரத்துடன், ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் வழக்கமான தரநிலைகளை விஞ்சி, அதியுயர் தரமான அளவுகோல்களைப் பின்பற்றுவதை உறுதி செய்கிறது. சிறந்த மருத்துவ பலன்களை அடைவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அணியால் தமது சுகாதாரத் தேவைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன என்பதை அறிந்து நோயாளர்கள் ஆறுதல் அடையலாம்.

இந்த கூட்டாண்மையின் அத்திவாரக் கற்களில் ஒன்று அதிநவீன மருத்துவ ஆய்வுகூடமாகும். இது 2 மணி நேரத்தினுள் விரைவான மற்றும் துல்லியமான நோய் கண்டறிதல் முடிவுகளுக்கு உறுதியளிப்பதுடன், இது தொழில்துறை நியமங்களை விடவும் மேம்பட்டதாகும். கொழும்பு 6 மற்றும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் உள்ள நோயாளர்கள் தற்போது புகழ்பெற்ற மருத்துவ ஆலோசகர்களின் சேவை அட்டவணை மற்றும் மேம்பட்ட நோய் கண்டறிதல் வசதிகள், துல்லியமாக நோய் கண்டறிதல்களை விரைவுபடுத்துதல் மற்றும் சரியான நேரத்தில் உரிய மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளும் வாய்ப்பினை மேம்படுத்துவதன் மூலம் பயனடையலாம்.

ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் மற்றும் மெடி கிளினிக்கின் கூட்டாண்மை சுகாதாரப் பராமரிப்பின் புதிய சகாப்தத்தை தோற்றுவிக்கும் ஒரு வாக்குறுதியாகும். ஒரே கூரையின் கீழ் ஒரு விரிவான சேவைகளின் பட்டியலுடன், நோயாளர்கள் தமது முழுமையான நல்வாழ்வை நிவர்த்தி செய்யும் தங்குதடையற்ற, தனிப்பட்ட கவனிப்பை எதிர்பார்க்கலாம். வழக்கமான முறைகளை மீறிய, மாற்றத்திற்கு வழிகோலுகின்ற சுகாதாரப் பயணத்தை ஆரம்பிப்பதற்கு, 011 2 593 959 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தவும். மேலும் 36A, காலி வீதி, கொழும்பு 06 இல் உள்ள ஹேமாஸ் மெடி கிளினிக்கிற்கு வருகை தந்து ஆரோக்கியமானவராகவும், மேலும் துடிப்பானவராகவும் உங்களை மாற்றுவதற்கான முதல் அடியை எடுத்து வையுங்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT