205
காசாவில் கடந்த ஓக்டோபர் 07 முதல் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் தரப்பின் சுகாதார அமைச்சின் தரவுகளுக்கமைய இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரையில் 11,320 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 4,650 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர, 29,200 பேர் காயமடைந்துள்ளதாகவும் காஸா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.