Wednesday, July 17, 2024
Home » காசாவில் யுத்த நிறுத்தத்தை வேண்டி நிற்கும் இலங்கை எம்.பிக்கள்

காசாவில் யுத்த நிறுத்தத்தை வேண்டி நிற்கும் இலங்கை எம்.பிக்கள்

- கொழும்பு ஐ.நா தலைமையகத்தில் மகஜர் கையளிப்பு

by Prashahini
November 15, 2023 5:01 pm 0 comment

– மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 159 பேர் கையெழுத்து

காசாவில் உடனடியாக யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தலையிடுமாறு கோரி, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மகஜரொன்று, நேற்று  (14) காலை கொழும்பில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் கையளிக்கப்பட்டது.

இந்த மகஜரை கையளிக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், வீரசுமன வீரசிங்ஹ, பௌசி, ஹலீம், இஷாக் ரஹ்மான், ஹரீஸ், தௌபீக் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

மகஜரை கையளித்த பின்னர் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்,

“159இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மகஜரொன்றை, நேற்று கொழும்பில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் கையளித்துள்ளோம். ஐ.நா பொதுச்செயலாளர் திரு.அன்டோனியோ குட்டெரஸ் அவர்களுக்கு முகவரியிட்ட இந்தக் கடிதமே இலங்கை தூதரகத்தில் கையளிக்கப்பட்டது. பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 பேரும் இதே நிலைப்பாட்டிலேயே உள்ளனர். எனினும், இந்த முயற்சி அவசரமாக மேற்கொள்ளப்பட்டதனால், அனைவரினது கையொப்பங்களையும் பெறமுடியாமல் போய்விட்டது.

இஸ்ரேலியர்களால் ஏவப்படும் ஏவுகணைகளும் பொழியப்பட்டு வரும் குண்டுகளும் காசாவில் மிக மோசமான அழிவை ஏற்படுத்தி வருகின்றன. பச்சிளம் குழந்தைகள், பெண்கள் என்ற விவஸ்தையின்றி குண்டுகளை வீசி, இந்த அக்கிரமங்களை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அல் ஷிபா வைத்தியாசாலை மீதும் குண்டுகள் வீசப்பட்டு, அங்குள்ள நோயாளர்கள் வைத்தியர்கள் உட்பட மருத்துவ உதவியாளர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர். காசாவே ஒரு மயான பூமியாக மாறியுள்ளது.

யுத்த நிறுத்தத்தினால் மட்டுமே இந்த மக்களை காப்பாற்ற முடியும். எனவே, யுத்த நிறுத்தத்தை மேற்கொள்வதற்கு ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியே, நாம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளோம்.

அதுமாத்திரமின்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்ரேல் மேற்கொள்ளும் இந்த அராஜகத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கு உதவக் கூடாது.

இந்த யுத்தத்தினால் 120க்கு மேற்பட்ட ஐ.நா ஊழியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.நாவில் அங்கம் வகிக்கும் நாடுகளில், 120 உலக நாடுகள் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென பிரேரணை கொண்டுவந்த போதும், ஐ.நாவினால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாதிருக்கிறது.

அத்துடன், 54க்கு மேற்பட்ட முஸ்லிம் நாடுகளும் இந்த விவகாரத்தை கையிலெடுத்து, யுத்த நிறுத்தத்தை கொண்டுவர முயற்சிக்க வேண்டும். அதேபோன்று, அரபு நாடுகள் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகள் (OIC) ஆகியவற்றுக்கும் மேற்குலக நாடுகளான பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கும் இந்த மகஜரின் பிரதியை அனுப்ப நடவடிக்கை எடுப்போம்” என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த மகஜரின் பிரதியொன்று இலங்கைக்கான பலஸ்தீன தூதுவருக்கும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Stop-Violence-Against-Gaza-Sri-Lankan-MPs-Signature

மகஜரின் தமிழ் மொழிபெயர்ப்பு

09.11.2023
திரு.அன்டோனியோ குட்டெரஸ்,
பொதுச் செயலாளர்,
ஐக்கிய நாடுகள் சபை

கனம் ஐயா, 

காசாவில் பாலஸ்தீனிய குடிமக்களுக்கு எதிரான போர் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. எண்ணற்ற அப்பாவி உயிர்களின் இழப்பு, அவர்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள். விரிவான உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளதுடன், நூறாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள்  இடம்பெயர்ந்துள்ளனர்.

காசா பகுதியின் தற்போதைய நெருக்கடி உலகளாவிய கவலையாகும். இது உடனடி கவனம் மற்றும் தலையீட்டைக் கோருகிறது, குறிப்பாக காசாவின் குடிமக்களுக்கு அடிப்படை மனிதத் தேவைகளான உணவு, தண்ணீர், மின்சாரம், மருந்து மற்றும் தங்குமிடம் ஆகியவற்றைப் பறிக்கும், இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஒன்றிணைந்த முடிவுகளுக்குப் பிறகு, எந்த நிபந்தனையின் கீழும் எந்த சக்தியாலும் அல்லது கட்சியாலும் அதனை தடுக்க முடியாது.

காசா மீதான கொடூரமான இஸ்ரேலிய தாக்குதல் குறிப்பாக, அண்மையில் இடம்பெற்ற மருத்துவமனை மீதான கண்மூடித்தனமான குண்டுவீச்சு, சர்வதேச சட்டம் மற்றும் ஜெனீவா மாநாட்டின் கீழ் ஒரு போர்க்குற்றம் ஆகும். இது நீதியை நம்பும் அனைத்து நபர்களாலும் கண்டிக்கப்பட வேண்டும். காசாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட முந்தைய போர்களோ, ஏவப்பட்ட ஏவுகணைகளோ, இதுவரை இஸ்ரேல் ஏவியது போன்ற மிகக் கொடூரமான சேதத்தை உருவாக்கவில்லை. அவர்களின் நோக்கம் காசாவில் உள்ள பாலஸ்தீனிய குடிமக்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றுவதேயாகும் என்பது இதில் தெளிவாகின்றது. அவர்களை தெற்கே செல்லுமாறு கோருவதில் ஒரு மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கும் அவர்களின் நோக்கம், காசாவில் உள்ள நோயுற்றவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் மற்ற மருத்துவமனைகளை எச்சரிப்பது உட்பட, மனிதநேயம் மற்றும் நீதியின் மீதான அவர்களின் கடுமையான அலட்சியத்தை காட்டுகிறது. இந்த தருணத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ஆட்சியின் முக்கிய நோக்கம், பாலஸ்தீனியர்கள் முழு உலகிற்கும் எச்சரிக்கும் நீண்டகால நக்பாவை தொடர, பாலஸ்தீன மக்களை வெளியேற்றி சினாய் பகுதிக்கு துரத்துவதாகும்.

இந்த மிருகத்தனமான செயற்பாடுகள் கடந்த 75 ஆண்டுகளாக தொடர்கிறது, இந்த வரலாறு முழுவதும் 1948 இல் மட்டும் 51 க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்தன. அதன் பிறகு, பாலஸ்தீனிய குடிமக்கள் மீது பல தொடர்ச்சியான மிருகத்தனமான மற்றும் மனிதாபிமானமற்ற படுகொலைகளின் நீண்ட வரலாறு அடங்கியுள்ளது. பல பாலஸ்தீனியர்களை கொடூரமாக கொன்ற பாரூச் கோல்ட்ஸ்டைன் (Baruch Goldstein) மற்றும் மீர் கஹான் (Meir Kahanne) மற்றும் அவர்களை பின்பற்றுபவர்கள் இரண்டு அமெரிக்க குடிமக்கள் ஆவர். மேலும் பலஸ்தீனியர்களை துரத்திவிட்டு அவர்களை இடமாற்றம் செய்வதே அவர்களது நோக்கமாக இருந்தது. மேலும் இஸ்ரேலின் மிகவும் மோசமான படுகொலைகளில் கான் யூனிஸ், சப்ரா மற்றும் ஷதிலா அல் அக்ஸா மற்றும் கானா போன்ற சிலவற்றை குறிப்பிடலாம்.

சமீபத்திய நக்பா பேரழிவில் போர்க்குற்றங்கள், இன அழிப்பு, நிறவெறிக் கொள்கைகள் ஆகியவை அடங்கும். இது அனைத்து மனித உரிமை அமைப்புகளாலும் ஆவணப்படுத்தப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த இனப்படுகொலையில் காசாவில் மட்டும் 10,569 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் 7000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் (விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது). அவர்கள் காசாவை ஒரு கொலைக்களமாக மாற்றியுள்ளனர். 26,475க்குஅதிகமான பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கையில் நோயாளிகள் மற்றும் இஸ்ரேலிய விமானத் தாக்குதலால் அல்-அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனையில் (காசாவிலுள்ள ஒரே பாட்டிஸ்ட் / ஆங்கிலிகன் மருத்துவமனை) இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களும் அடங்குவர். மேலும், பாதிக்கப்பட்டவர்களில் இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளனர். இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில், சுமார் 193 சுகாதாரப் பணியாளர்கள், தங்கள் மனிதாபிமான பணிகளைச் செய்துகொண்டிருந்தபோது கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 47 பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்  பணியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். நவம்பர் 08ஆம் திகதி சுமார் 50,000 பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது பாதுகாப்பான தாழ்வாரங்கள்திறக்கப்பட்டதிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மிகப்பெரிய எண்ணிக்கையாகும், இது நவம்பர் 05ஆம் திகதியிலிருந்து 72,000 எண்ணிக்கையாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம், ஹசாவின் 45% வீதமான குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன. சமீபத்திய புள்ளிவிபரங்களின் படி, 402 சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட, 115 சுகாதார வசதிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன என்பது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும்.

கட்சி, இனம், பாலினம் அல்லது வேறு ஏதேனும் வேறுபாடுகளுக்கு அப்பால், பாலஸ்தீன மக்களுடன் உறுதியாக நிற்கும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களது கோரிக்கைகள் பின்வருமாறு:

  1. உலக அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் முக்கிய பங்குதாரர்கள் மத்திய தரைக்கடல் பகுதியின் பிரச்சினையின் மூல காரணத்தை ஆராய வேண்டும். சரியான மற்றும் உண்மையான தீர்வை செயல்படுத்துவதன் மூலம் உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வை வழங்குவதற்கான நடைமுறை நடவடிக்கைகளின் வழிகளைக் கண்டறிய வேண்டும். கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட 1967 எல்லைகளின் சுதந்திர மற்றும் இறையாண்மையைக் கொண்ட பாலஸ்தீனத்தை நாம் உருவாக்கி அங்கீகரிக்க வேண்டும். பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் நியாயமான அமைதியை அடைவதற்கான ஒரே வழி இதுவாகும், மேலும் இஸ்ரேலும் அதை ஏற்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த உலக நாடுகள் செயல்பட வேண்டும்.
  2. உலகளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட தீர்மானங்கள், சர்வதேச சட்டங்கள் மற்றும் இது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தமான தேவையை நிறைவேற்ற, உடனடியாகப் போரை நிறுத்தவும், பேச்சுவார்த்தைக்கு வருமாறும் நாங்கள் கோருகிறோம். பாலஸ்தீனத்தின் சுதந்திர அரசை உருவாக்குவதற்கு சர்வதேச சமூகம் அதிகபட்சமாக தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
  3. இஸ்ரேல், சர்வதேச சட்டங்கள் மற்றும் உலகளாவிய மனிதாபிமான விதிமுறைகளின் கீழ், இப்போதும் அதற்கு முன்னும் ஒரே மாதிரியான அப்பட்டமான போர்க்குற்றத்தை மேற்கொண்டமைக்கு பொறுப்பேற்க வேண்டும்.
  4. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் அனைத்து நிறுவனங்களும், சர்வதேச சமூகமும், அனைத்து அரசு மற்றும் சிவில் நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், உலகில் உள்ள அனைத்து சமூகப்பற்று எண்ணம் கொண்ட குடிமக்கள் மற்றும் உலகில் அமைதியை விரும்புவோர், பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அதன் தாக்குதல்கள், அடக்குமுறைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை நிறுத்துவதற்கு இஸ்ரேல் மீது திணிக்க தேவையான நடவடிக்கைகளில் விரைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம். 
  5. இஸ்ரேலை ஆதரிப்பதை நிறுத்திவிட்டு, சர்வதேச சட்டத்தின்படி நயவஞ்சகத்தனம் மற்றும் இரட்டை நிலைப்பாடு இல்லாமல் நியாயமான ரீதியில் நடந்துகொள்ளுமாறு, மேற்கத்திய நாடுகளுக்கு குறிப்பாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் மூன்று நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகியோரிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். மனித விழுமியங்கள், மனித உரிமைகள் ஆகியவற்றைக் கையாள்வதில் நேர்மையாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டிய நேரம் இது.

பாலஸ்தீனியர்களின் உயிர்கள் முக்கியம், அவர்களும் உலகில் உள்ள மற்றவர்களைப் போல மனிதர்கள், அமைதி மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கும்  உண்டு.

 

09.11.2023

Mr. Antonio Guterres,
Secretary General,
United Nations

Dear Sir,

The war against Palestinian civilians especially in Gaza, has reached a critical point, with the loss of countless innocent lives, approximately two thirds of whom are women and children, extensive infrastructure damage, and the displacement of hundreds of thousands of Palestinians. 

The Gaza Strip’s ongoing humanitarian crisis is a global concern that demands immediate attention and intervention, especially after the decisions taken by the Israeli government’s collective punishment of depriving the civilians of Gaza of food, water, electricity, medicine and shelter which are the basic human needs which under no condition canbe cut or blocked by any force or party.

The brutal Israeli onslaught on Gaza, the most recent being indiscriminate bombings in  hospitals, amounts to a war crime under International Law and the Geneva convention, which should be condemned by all persons who believe in justice. None of the previous wars nor the missiles launched from Gaza has ever created such extensive and brutal damage, as what Israel has launched to date, which is a clear indication is that their aim is to expel Palestinian civilians in Gaza from their homes. Their intention to create a humanitarian crisis in asking them to move to the south, including warning other hospitals in Gaza which are treating the sick and injured, shows their callous disregard for humanity and justice. In this instance the Israeli Occupation regime main aim is for the People of Palestine to be expelled and chased to the Sinai area, in order to continue the long-endured Nakba which the Palestinians keep warning of to the whole world. 

This brutal colonization has been ongoing for the past 75 years where throughout this history more than 51 massacrers had taken place in 1948 alone and thereafter, a long history of many other successive brutal and inhuman massacrers on Palestinian civilians. The Baruch Goldstein massacrer and Meir Kahanne and their followers are two American citizen who have brutally killed many Palestinians, and their aim was to transfer Palestinians by chasing them out and some of the most notorious pogroms by Israel also took place in Khan Yunis, Sabra and Shatila Al Aqsa and Qana to name a few.

The latest on-going Nakba catastrophe, which includes war crimes, ethnic cleansing, apartheid policies which have been documented and confirmed by all human rights organizations and of late a very clear policy of genocide which is ongoing, where the number of fatalities in Gaza alone has reached 10,569 and the casualties most of whom are women and children amounts to more than 7000 (Details Attached), where they have turned Gaza into a killing field. Over 26,475 Palestinians have been injured. This number includes patients and those sheltering thousands of displaced people at the Al-Ahli Baptist Hospital (the one and only Batist / Anglican Hospital in Gaza) by an Israeli air strike and many victims are still under the rubble. Israeli airstrikes have killed around 193 healthcare personnel while carrying out their humanitarian missions. Moreover, 47 Palestinian journalists and media workers have been killed. It is estimated that around 50,000 Palestinians have been evacuated on 08th November, the largest number to be forcibly evicted since the so-called ‘safe corridors’ opened, bringing the estimated figure since 05th November to 72,000. At least 45% of Haza’s housing units have been damaged. It is highly regrettable that, according to the recent stats, 115 health facilities are targeted including 402 health workers.  

Our demands as Members of the Sri Lankan Parliament who firmly stand in solidarity with the people of Palestine, apart from party, ethnicity, gender or any other differences are as follows:

  1. We Demand the world, the key role players of the global politics to look at the root-cause of the Issue of the Mediterranean region and to find ways of practical actions to treat thisproblem immediately by implementing the right and genuine solutionof creating and recognizing the Independent and sovereign State of Palestine of 1967 Borders with East Jerusalem as its Capital. This will be only the way to achieve stability and a justifiablepeace in the region and the world must act to ensure that Israel must accept the same.
  2. We Demand to Stop the war immediately and to come to the table of negotiations to fulfil the stressing need to implement the universally agreed Resolutions,the international laws and the decisions made in this regard. The international community to fulfill their obligations to the maximum level to support the creation of the Independent State of Palestine
  3. Israel should be held accountable under international laws and the universal humanitarian regulations for the blatant war crime that they commit now and before alike.
  4. As members of Sri Lankan Parliament, we appeal the United Nations and all its agencies, international community, all governmental and civil institutions, NGOs, INGOs and all civic minded citizens of the world, those who love and seek peace in the world, to swiftly act by taking necessary steps to be imposed on Israel to Stop its onslaught, oppressions and aggressions against the people of Palestine.
  5. We humbly appeal to the Western countries specially the three Permanents members of the UN security council USA, UK and France to stop supporting Israel and apply fair play in keeping with international law without hypocrisy and double standard. 

This is the  time to be honest and genuine specially when it comes to dealing with Human values, human rights for people to live in dignity and peace.

Palestinian lives matter and they are also human beings like others in the world with all rights to live in peace & dignity.

Sincerely,

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT