Home » வடமாகாணத்தில் பாடசாலை மாணவர் இடைவிலகல் அதிகரிப்பு

வடமாகாணத்தில் பாடசாலை மாணவர் இடைவிலகல் அதிகரிப்பு

by mahesh
November 1, 2023 8:20 am 0 comment

தற்போது வடமாகாணத்தில் பாடசாலையிலிருந்து மாணவர்கள் இடைவிலகும் விகிதம் அதிகரித்துச் செல்வதாக, அம்மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

இந்நிலையில், ஆரம்பக்கல்வி பாடசாலை மாணவர்கள் மத்தியில் தாமாகவே வாசித்தல் மற்றும் எழுதும் திறன் குறைவடைந்து வருவதாகவும், வடமாகாணத்தை பொறுத்தவரையில் கல்வியில் பின்னோக்கிச் செல்வது வேதனையான விடயமாகுமெனவும், அவர் தெரிவித்தார். ஆகையால், ஆரம்பப்பிரிவு மாணவர்கள் சுயமாக வாசித்தல் மற்றும் எழுதும் திறனை வளர்ப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் கல்விக்காக பெருமளவான நிதியை செலவழித்து வருவதாகத் தெரிவித்த அவர், இளம் வயதினர் கல்வியில் சிறந்து விளங்கினாலே நாடு முன்னோக்கிச் செல்லுமெனவும் தெரிவித்தார்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT