Saturday, April 27, 2024
Home » இலங்கையின் Audio துறையில் ஒரு தசாப்த கால வளர்ச்சியைக் கொண்டாடும் Digital Ear

இலங்கையின் Audio துறையில் ஒரு தசாப்த கால வளர்ச்சியைக் கொண்டாடும் Digital Ear

by Rizwan Segu Mohideen
October 27, 2023 11:47 am 0 comment

இலங்கையில் உயர்தர Audio தீர்வுகள் மற்றும்  உயர்மதிப்பு  வாழ்க்கை முறை தயாரிப்புகளில்  பிரசித்திபெற்ற விநியோகஸ்தரான Digital Ear  ஆனது  அண்மையில்  தனது  பத்தாவது  ஆண்டு  நிறைவினைக்  கொண்டாடியது.

கொழும்பின் பிரபல பகட்டு உணவகங்கள் மற்றும் மதுஅருந்தகங்களில் ஒன்றான Verticle by Jetwingஇல் இடம்பெற்ற இம் மைல்கல் நிகழ்வின்போது, Digital Ear ஆனது Void Acoustics   இனைப் பயன்படுத்துவதன் மூலம் சர்வதேச விநியோகஸ்தர்களை மற்றும் உள்ளூர் வாடிக்கையாளர்கள் உட்பட 150 இக்கும் மேற்பட்ட மதிப்பிற்குரிய விருந்தினர்களினை ஒன்றிணைத்தது. இந்நிகழ்வினில் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு நிறைவுச் சின்னமானது இம்மாதம் 22ம் திகதியன்று வெளியிடப்பட்டது.  மேலும் அதன் விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.

Digital Ear இன்  ஸ்தாபகரும்  முகாமைத்துவப்  பணிப்பாளருமான  Haren Perera  இம் மைல்கல் நிகழ்வினைப்  பற்றிய தனது கருத்துக்களைப்  பகிர்ந்து கொண்டார்: “இலங்கையில் Audio ஆனது  சிறந்து  விளங்கும்  ஒரு  தசாப்தத்தினை  நினைவுகூருவதானது எனக்கு பெரு மகிழ்ச்சியினை அளிக்கின்றதுகடந்த ஒரு தசாப்தத்திற்கு முன்பு, எமது நாட்டிலே மிக உயர்ந்த தரமான Audio தீர்வுகளை வழங்குவதற்கான ஒரு தொலைநோக்குப் பயணத்தினை நாம் ஆரம்பித்தோம். ஆனால் இன்றோ, எமது நிறுவனமானது   பூரணத்துவமான Audio தொடர்பாக எமது இடையறாத முயற்சிக்கு ஒரு தக்க சான்றாக உயர்ந்து நிற்கின்றது. உள்ளூர் Audio துறையின் மதிப்பினை அதிகரிப்பதன் மூலம், Audio பொறியியலின் எல்லைகளைக் கடந்து ஏராளமான  தனிநபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில்  எமது  உலகத் தரம் வாய்ந்த Digital சாதனங்களின்  மூலம் யாவரும் ஒலியில் புதிய பரிமாணங்களை அனுபவிக்க உதவுவதில் நாங்கள் பெருமை கொள்கின்றோம்.”

Haren Perera தொடர்ந்தும் கூறுகையில், “எமது Brand கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் எமது விசுவாசமான வாடிக்கையாளர்கள், எமது ஆதரவின் தூண்களாகத் திகழும் எமது விநியோகஸ்தர்களை மற்றும் அயராது கடமையாற்றும் எமது தனிச்சிறப்புவாய்ந்த நிறுவன அணியினர் இன்றி நிச்சயமாக இச்சிறப்பு வாய்ந்த பயணமானது  வெற்றி அடைந்திருக்காது.   இன்  நம்பமுடியா மைல்கல் நிகழ்வினை  நாம் கொண்டாடும்  இத்தருணத்தில், ஒலியின் ஆற்றலினை இலங்கை வாழ் மக்களுக்கு  அறிமுகப்படுத்துவதற்கான எமது தசாப்தகால தேடலில் இன்றியமையாத பங்களிப்பிற்காக எமது பங்குதாரர்கள் யாவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.”

Digital Ear ஆனது குடியிருப்பு சார்ந்த மற்றும் வர்த்தக வளாகங்களுக்கு அதிநவீன   ஆடியோ  தீர்வுகளை  வழங்குவதில்  நிபுணத்துவம்  பெற்றதாகும் .   Void, Synergistic Research, NAD மற்றும் பலவற்றை உள்ளடக்கிய Audio துறையில் உலகின் மிகவும் பிரபலமான 20 Brand களை எம் நிறுவனமானது பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்துகின்றதுAudio நிபுணத்துவத்துடன் கூட Digital Ear ஆனது உயர்மதிப்பு மிக்க Lifestyle ​​தயாரிப்புகளின் தேர்வுகளினையும்  வழங்குகின்றது. மேம்பட்ட Smart Locks மற்றும் வீட்டு Automation தீர்வுகள் முதல் Gaming Table கள் மற்றும் Bespoke Bar கள் போன்ற ஆடம்பரமான Mancave அத்தியாவசியங்கள் என்று எம்  நிறுவனமானது   பல்வேறு  வகையான  தேவைகளையும்   பூர்த்தி  செய்கின்றது.

Digital Ear ஆனது  மேற்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க  திட்டங்களில்  Nelum Pokuna, Stein Studios மற்றும்  Jetwing Hotels  என்பவையும் உள்ளடங்கும்.   ஒரு தசாப்த கால அனுபவம் மற்றும் தரம், புதுமை மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கான உறுதியான  அர்ப்பணிப்பு  போன்றவற்றினைத் தொடர்ந்தும்  வழங்குவதோடு, எம்  நிறுவனமானது   தனது  தயாரிப்பு  வழங்கல்களை விரிவுபடுத்தவும், உள்ளூர் மற்றும் சர்வதேச திட்டங்களில் ஒத்துழைப்பினை நல்கவும் மற்றும் உலகின் மிகச்சிறந்த வாடிக்கையாளர்களுக்கு Audio தீர்வுகள் மற்றும் உயர்மதிப்பு   வாழ்க்கை முறை தயாரிப்புகள் போன்ற சேவைகளைத்  தொடர்ந்தும்  வழங்கவும்  திடசங்கற்பம்  பூண்டுள்ளது. 

Digital Ear தொடர்பாக மேலதிக தகவலுக்கு https://www.digitalearsl.com/ இனைப், பார்வையிடவும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT