Monday, April 29, 2024
Home » மயிலந்தமடு மேய்ச்சல் தரை விவகாரத்துக்கு உடனடித் தீர்வு

மயிலந்தமடு மேய்ச்சல் தரை விவகாரத்துக்கு உடனடித் தீர்வு

by damith
October 16, 2023 6:50 am 0 comment
  • வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்பு
  • கிழக்கு தமிழ் எம்பிக்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்ததாக கிழக்கு ஆளுநர் செந்தில் தெரிவிப்பு

மட்டக்களப்பு, மயிலந்தமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு பண்ணையாளர் விவகாரத்துக்கு உடனடியாக தீர்வை வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

மயிலந்தமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு பண்ணையாளர் தமது மேய்ச்சல் தரை காணிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பில் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. ஜனாதிபதி சீனாவுக்கு புறப்படுவதற்கு முன்னதாக கலந்துரையாடல் ஒன்றை நேற்று நடத்தினார். இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதியின் செயலாளர், ஆளுங்கட்சி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிபர், மகாவலி பணிப்பாளர் நாயகம், பொலிஸ் மாஅதிபர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விவசாயம் மற்றும் கால்நடைவளர்ப்பு என்பன இந்த நாட்டின் முதுகெலும்பாகும். இவை இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும்.

வெளிமாவட்டங்களிலிருந்து வந்து மட்டக்களப்பு மயிலந்தமடுவில் விவசாயம் மேற்கொள்பவர்களுக்கு அவர்களை பிரதி நிதித்துவப்படுத்தும் மாவட்டங்களிலேயே விவசாயம் மேற்கொள்ள மாற்று இடஒதுக்கீடுகள் வழங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். இவ்வாறு மாற்று இடங்கள் வழங்குவதன் ஊடாக பண்ணையாளர்கள், விவசாயிகள் என இரு தரப்பினருடைய பிரச்சினைகளும் முடிவுக்கு வருமென ஜனாதிபதி தெரிவித்தார். மேலும் பண்ணையாளர்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வரை கால்நடைகளுக்கு உணவுகளை வழங்க தேவையான உதவித் தொகைகளை வழங்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT