Saturday, May 11, 2024
Home » புகையிரத விபத்து; ஸ்தம்பிதமடைந்த புகையிரத சேவை வழமைக்கு

புகையிரத விபத்து; ஸ்தம்பிதமடைந்த புகையிரத சேவை வழமைக்கு

- இரட்டைப் பாதையில் ஒன்றில் போக்குவரத்துக்கு வழி

by Rizwan Segu Mohideen
August 9, 2023 1:16 pm 0 comment

– ஒரு சில புகையிரதங்கள் தாமதமாகும் வாய்ப்பு

இன்று (09) காலை மீரிகம, வில்வத்த புகையிரத கடவையில் இடம்பெற்ற புகையிரத விபத்தினால் பிரதான பாதையில் இயங்கும் புகையிரத சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அதன் இரட்டைப் பாதைகளில் ஒன்று சேவைக்காக திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தையடுத்து இயக்கப்படவிருந்த 12 புகையிரதங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அவை ஒவ்வொன்றாக ஒற்றைப் பாதையில் இயக்கப்படுவதாக புகையிரத உதவிப் பொது முகாமையாளர் எம்.ஜே. இதிபாலகே குறிப்பிட்டார்.

எனினும், புகையிரத போக்குவரத்தில் தாமதங்கள் ஏற்படலாம் என பிரதிப் பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விபத்து காரணமாக பஸ்யால சந்தியில் இருந்து மீரிகம மற்றும் நெடுஞ்சாலை நுழைவாயில் நோக்கிய போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீரிகம, வில்வத்த புகையிரத கடவையில் கொள்கலன் லொறியொன்று புகையிரதத்துடன் மோதியதில் இன்று காலை விபத்து ஏற்பட்டிருந்தது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதோடு, குறித்த கொள்கலன் லொறி மற்றும் புகையிரத எஞ்ஜின் பலத்த சேதமடைந்துள்ளன.

பொல்கஹவெலயிலிருந்து இரத்மலானை நோக்கி பயணித்த ‘பௌசி’ எனும் அலுவலக புகையிரதம் இன்று காலை 6.18 மணியளவில் மீரிகம புகையிரத நிலையத்தை அடையவிருந்த நிலையில், அதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே வில்வத்தை புகையிரத கடவையில் விபத்துக்குள்ளானது.

குறித்த கடவையில் கொள்கலன் லொறி ஒன்று புகையிரத கடவையை திடீரென செயலிழந்துள்ளது.

அப்போது குறித்த லொறியை சாரதி மீள இயக்க முயன்ற நிலையில் முயற்சி பலனின்றி அதிலிருந்து வெளியேறியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT