ஜூன் 08 இல் மேலும் 12 மாவட்டங்களில் Sinopharm தடுப்பூசி திட்டம்

ஜூன் 08 இல் மேலும் 12 மாவட்டங்களில் தடுப்பூசி திட்டம்-Sinopharm COVID19 Vaccination for 12 More Districts From June 08

- 60 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை

எதிர்வரும் ஜூன் 08ஆம் திகதி முதல் மேலும் 12 மாவட்டங்களில் Sinopharm தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அதற்கமைய, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, நுவரெலியா, மாத்தளை, பதுளை, புத்தளம், அநுராதபுரம், கேகாலை, அம்பாந்தோட்டை, மொணராகலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த மாவட்டங்களில் வசிக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், அரச ஊழியர்கள் ஆகியோருக்கு இதில் முன்னுரிமை வழங்குமாறு, அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக, ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...