இலங்கை முழுவதும் பயணக் கட்டுப்பாடு ஜூன் 14 வரை நீடிப்பு

இலங்கை முழுவதும் பயணக் கட்டுப்பாடு ஜூன் 14 வரை நீடிப்பு-Island Wide Travel Restrictions Extended Till June 14

- ஜூன் 07 இல் நீக்கப்படாது
- மே 25 இரவு முதல் தொடர்ச்சியாக 19 நாட்களுக்கு பயணக் கட்டுப்பாடு

தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

கொவிட்-19 3ஆம் அலையின் உச்சத்தை தொடர்ந்து, கடந்த மே மாதம் 25ஆம் திகதி, நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு, மே 31ஆம் திகதி தளர்த்ப்படுமென அறிவிக்கப்பட்ட போதிலும், அது தொடர்ச்சியாக ஜூன் 07ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ஜூன் 14ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மே 25 இரவு 11.00 மணி முதல் நாடு முழுவதும் தொடர்ச்சியாக 19 நாட்களுக்கு இப்பயணக் கட்டுப்பாடு தொடரவுள்ளது.

இதேவேளை, பயணக்கட்டுப்பாடு தொடர்பில் கடந்த மே 11ஆம் திகதி முதல் மே 31ஆம் திகதி வரை பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த உத்தரவு எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி நீடிக்கப்படுவதாக, நேற்று (01) அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

PDF File: 

Add new comment

Or log in with...