ரிவெஸ்டன் பிரதேசம் சுற்றுலா மையமாக்கப்படும் | தினகரன்


ரிவெஸ்டன் பிரதேசம் சுற்றுலா மையமாக்கப்படும்

மாத்தளை ரிவெஸ்டன் வனப்பிரதேசத்தை சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு 600 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக சுற்றுலாத் துறை கிறிஸ்தவ மத விவகார மற்றும் வன ஜீவ இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிகார தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக இரத்தோட்டை ரிவெஸ்டன் வீதி அகலமாக்கப்பட்டு நவீன முறையில் புனரமைக்கப்படவுள்ளது. இப்பிரதேச இயற்கை சுற்றாடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.மேலும் இங்கு வரும் உள்ளூர், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மாத்தளை சுழற்சி நிருபர்


Add new comment

Or log in with...