ஆசியாவின் சிறந்த வர்த்தக நாமமாக Samsung Electronics தெரிவு | தினகரன்


ஆசியாவின் சிறந்த வர்த்தக நாமமாக Samsung Electronics தெரிவு

2019ஆம் ஆண்டின் ஆசியாவின் சிறந்த வர்த்தக நாமமாக தொடர்ச்சியான எட்டாவது வருடமாகவும்  Samsung Electronicsதெரிவு செய்யப்பட்டிருந்தது. நீல்சன் நிறுவனத்தினால் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த “ஆசியாவின் சிறந்த 1000வர்த்தக நாமங்கள்” எனும் வருடாந்த ஒன்லைன் கருத்துக்கணிப்பிலிருந்து இந்த தெரிவு மேற்கொள்ளப்பட்டிருந்தது.  

வாகனங்கள், விற்பனை, உணவு மற்றும் பானங்கள் மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் சாதனங்கள் போன்ற 15பிரதான தயாரிப்பு பிரிவுகளின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் அதிகளவு விரும்பப்படும் வர்த்தக நாமங்கள் தொடர்பான நுகர்வோர் உள்ளார்ந்த தரவுகள் கண்டறியப்பட்டிருந்தன.  

ஆறு பிரிவுகளில் Samsung முதல் இடத்தில் தெரிவாகியிருந்தது. இதில் அதிகளவு மொபைல் நட்பான வர்த்தக நாமம், உறுதியான உள்நாட்டு வர்த்தக நாமம் மற்றும் சிறந்த பெறுமதிகளைக் கொண்ட வர்த்தக நாமம் போன்றன அடங்கியிருந்தன.  

இந்த ஆண்டுக்காக சிறந்த 1000வர்த்தக நாமம் கருத்துக்கணிப்பில் Samsung மொபைல் சாதனங்கள், தொலைக் காட்சி உற்பத்தி மற்றும் ஸ்மார்ட் இல்ல தொழில்நுட்ப பிரிவுகளில் உயர்ந்த நிலைகளை பெற்றிருந்தது.  

ஆசியாவின் 14சந்தைகளில் நுகர்வோரின் கருத்துக்களை இனங்கண்டிருந்தது. இந்த கருத்துக்கணிப்பினூடாக துல்லியமான தகவல்கள் பெறப்படுவதை உறுதி செய்யும் வகையில், வயது, பாலினம் மற்றும் மாதாந்த வருமானம் போன்ற வகைப்படுத்தலின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.  

ஆசிய பசுபிக் மற்றும் சர்வதேச தகவல் மற்றும் உள்ளக ஆய்வுத் தகவல்கள் வழங்குநர் நீல்சனினால் தயாரிக்கப்பட்டிருந்த ஒன்லைன் கருத்தாய்வின் பிரகாரம் பெறப்பட்ட தரவுகளிலிருந்து ஆசியாவின் சிறந்த 1000வர்த்தக நாமங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன.

2019மார்ச் 13மற்றும் ஏப்ரல் 10ஆகிய தினங்களுக்கிடையே இந்த கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த கருத்துக்கணிப்பு பின்வரும் 14சந்தைப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தன:

அவுஸ்திரேலியா, சீனா, ஹொங் கொங், இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, நியுசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென் கொரியா, தாய்வான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்றன அடங்கியிருந்தன. ஒவ்வொரு சந்தையிலிருந்தும் சுமார் 400பதிலளிப்பாளர்களில் இந்த ஆய்வு தங்கியிருந்தது.    

 


Add new comment

Or log in with...