நெதர்லாந்து கடற்கரையில் 20,000 பறவைகள் இறப்பு | தினகரன்


நெதர்லாந்து கடற்கரையில் 20,000 பறவைகள் இறப்பு

நெதர்லாந்து கடேலோரம் நெடுக சுமார் 20,000 வட துருவ கடற்பறவைகள் அண்மைய வாரங்களில் இறந்துள்ள மர்மம் தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் புயலில் சிக்கிய பனாமா நாட்டு கொடியோடு பயணித்த கப்பலில் இருந்து சுமார் 345 கொள்கலன்கள் கடலில் விழுந்ததால் இது நிகழ்ந்திருக்கக் கூடுமா என்று நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பாராப்பின், பிளாஸ்டிக்குகள் மற்றும் பொலீஸ்டைரின் உட்பட மோசமான பொருட்கள் இந்த கொள்கலன்கள் சிலவற்றில் இருந்ததாக நம்பப்படுகிறது.

எம்.எஸ்.சி சோயி என்ற இந்த கப்பலில் இருந்து கொள்கலன்கள் விழுந்த சில மணிநேரங்களில், அதில் இருந்த குழந்தைகளின் பொம்மைகள், மரச் சாமான்கள் மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் கடலோரத்திற்கு அடித்து வரப்பட்டன.

ஊகத்தின் அடிப்படையில் இறந்த கடற்பறவைகளின் எண்ணிக்கை சுமார் 20,000 என கணிக்கப்படுகிறது என்று கடற்பறவை நிபுணர் மர்டிக் லியோபோல்ட் தெரிவித்தார்.

இவ்வளவு அதிக பறவைகள் இறந்துள்ளதாற்கு காரணத்தை அறிய 100 பறவைகளின் உடற்கூறு ஆய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...