காவலரணிலிருந்து சிப்பாய் கொலை; இரு சிப்பாய்கள் கைது (UPDATE) | தினகரன்

காவலரணிலிருந்து சிப்பாய் கொலை; இரு சிப்பாய்கள் கைது (UPDATE)

காவலரணில் காவல் இருந்த சிப்பாய் கொலை-Soldier Died-Ambepussa Army Camp

 

இக்கொலை தொடர்பில் குறித்த இராணுவ முகாமில் கடமையாற்றி வரும், இரு சிப்பாய்கள் (29, 27) கைது செய்யப்பட்டுள்ளனர்.


காவலரணில் காவல் இருந்த சிப்பாய் கொலை (Sep 21-11.07am)

இராணுவ முகாமின், காவலரணில் காவலிலிருந்த சிப்பாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் கடமைபுரிந்து வந்த, இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (21) அதிகாலை 4.40 மணியளவில், மீரிகமை பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கேகாலை, புளத்கொஹுபிட்டியவைச் சேர்ந்த 21 வயதான ஜயசேன எனும் சிப்பாய் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இராணுவ சிப்பாய், இராணுவ முகாமினுள் இருந்த, காவல்அரணில், இன்று அதிகாலை 2.00 - 4.00 மணி வரை, கடமையில் இருந்த வேளையில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு, இக்கொலை இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தனகலை நீதவானினால், நீதவான் விசாரணைகள் இடம்பெறும் வரை குறித்த பகுதி, பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர் தெரிவித்தார்.

மீரிகமை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...