Saturday, April 27, 2024
Home » புனித பேதுரு, பவுல் பேராலய அர்ச்சிப்புப் பெருவிழா

புனித பேதுரு, பவுல் பேராலய அர்ச்சிப்புப் பெருவிழா

நவம்பர் 18 ல் திருச்சபை சிறப்பிக்கின்றது

by damith
November 14, 2023 9:10 am 0 comment

“என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும்” (மாற் 11:17)

உரோமையை ஆண்டுவந்த நீரோ மன்னனுடைய காலத்தில், வத்திக்கான் குன்றின் கீழ் கி.பி. 64 ஆம் ஆண்டு, திருத்தூதர்களின் தலைவரும் முதல் திருத்தந்தையுமான பேதுரு கொல்லப்பட்டார் என்பது வரலாறு.

அதற்குப் பின்பு அவர் கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்று வந்த தொடக்க காலக் கிறிஸ்தவர்கள் அவருக்கு மிகுந்த மரியாதை செலுத்திவந்தனர். இவ்வழக்கம் நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்தது.

இதற்கிடையில் உரோமையை ஆண்டுவந்த கான்ஸ்டான்டைன் என்ற மன்னர் பேதுருவின் கல்லறை இருந்த இடத்தில் மிகப்பெரிய ஆலயம் ஒன்றைக் கட்டியெழுப்பினார்.

அதைத் தொடர்ந்து மக்கள் அங்கு கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினார். திருச்சபையில் நடந்த ஒருசில முக்கியமான நிகழ்வுகளுக்குப் பிறகு இது முக்கியமான இடமாக மாறிப்போனது.

ஆண்டுகள் செல்லச் செல்ல, கான்ஸ்டான்டைன் மன்னர் கட்டிய ஆலயம் பழுதடைந்தது. இதைப் பார்த்த திருத்தந்தை இரண்டாம் ஜூலியஸ், 1506 ஆம் ஆண்டு அங்கு புதிதாக ஆலயம் ஒன்றைக் கட்டியெழுப்பத் தொடங்கினார். இந்த ஆலயம் கட்டி எழுப்பப்பட 120 ஆண்டுகளானது. திருத்தந்தை இரண்டாம் ஜூலியஸ் தொடங்கிய இந்தப் பணியை திருத்தந்தை 8ஆம் அர்பன் என்பவர்தான் 1626 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 18 ஆம் நாள் நிறைவுசெய்தார்.

இந்தப் பேராலயத்தில் மைக்கேல் அஞ்சலோவின் வேலைப்பாடுகள் உட்பட, பல சித்ரவேலைப்பாடுகள் உள்ளடங்கி இருக்கின்றன.

Repoஇப்படி பலருடைய உழைப்பில், பல ஆண்டுகளாகக் கட்டி எழுப்பப்பட்ட தூய பேதுருவின் பேராலயம் இன்றைக்கும் அதே பொழிவோடும் எழிலோடும் மக்களுக்குக் காட்சி யளிக்கிறது.

அடுத்ததாக, புறவினத்தாரின் திருத்தூதர் என்று அழைக்கப்படுகின்ற தூய பவுல் ஒஸ்டின் நகர் நோக்கிச் செல்கின்ற சாலையில் உள்ள அகுவா சால்வியே (Aquae Salviae) என்ற இடத்தில் கொல்லப்பட்டார் என்பது யாவரும் அறிந்த செய்தி. இங்கே காண்டாண்ட்ஸ் மன்னர் பவுலுக்கென்று பேராலயம் கட்டத் தொடங்கினார். ஆனால், அது அவரால் முடியாமல் போகவே, திருத்தந்தை பெரிய லியோவின் ஆசியோடு முதலாம் தியோடர் என்ற மன்னர் அதை நிறைவுசெய்தார்.

இப்பேராலயமோ 1833 ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் கடுமையாக சேதமடைந்தது. எனவே திருத்தந்தை பதினோறாம் பத்திநாதருடைய காலத்தில், உலகெங்கிலும் பரவியிருந்த கிறிஸ்தவர்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டு தூய பவுல் பேராலயமானது கட்டயெழுப்பப்பட்டது.

இப்பேராலயப் பணிகள் 1854 ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆண்டு நிறைவுபெற்ற அர்ச்சிக்கப்பட்டது. தொடக்கத்தில் இப்பேராலயத்தின் அர்ச்சிப்புப் பெருவிழா டிசம்பர் 10 அன்று கொண்டாடப்பட்டு வந்தாலும், பின்னாளில் அது நவம்பர் 18 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டு, இன்றுவரை அதே திகதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT