திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பான முக்கியபுள்ளி கைது | தினகரன்

திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பான முக்கியபுள்ளி கைது

திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பான முக்கியபுள்ளி கைது-STF Arrested Underworld Gangster

 

திட்டமிட்டு குற்றங்களை புரிந்து வரும் குற்றவாளிகளில் ஒருவரான 'அங்கொட லொக்கா' எனும் முக்கிய சந்தேகநபரின் கூட்டாளி என தெரிவிக்கப்படும் 'சீட்டி' என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மண் ஏற்றும் தொழிலை மேற்கொண்டு வந்த, அங்கொட, கொட்டிகாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த எலவலகே சரத் குமார எனும் 41 வயதான குறித்த சந்தேகநபர், அவரது வீட்டில் வைத்து, விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து, கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மேலதிக விசாரணைக்காக சந்தேகநபரை, திட்டமிட்ட குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...