பிணைமுறி அறிக்கை, பரிந்துரை தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிவிப்பு | தினகரன்

பிணைமுறி அறிக்கை, பரிந்துரை தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிவிப்பு

 

பிணை முறி அறிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு ஜனாதிபதி விசேட அறிவிப்பு... இலங்கை மத்தியவங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஊடகங்களுக்கு விசேட அறிவித்தலொன்று விடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி

எதிர்வரும் ஜனவரி 03 ஆம் திகதி ஜனாதிபதியினால் ஊடகங்களுக்கு அந்த விசேட அறிவித்தலை விடுக்கவுள்ளார்.

- ஜனாதிபதி ஊடகப் பிரிவு

 


Add new comment

Or log in with...