Home » மே மாதம் இரண்டு விவாதங்களுக்கும் தயார்
கடிதம் எழுத வேண்டியதில்லை

மே மாதம் இரண்டு விவாதங்களுக்கும் தயார்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

by Gayan Abeykoon
April 24, 2024 9:48 am 0 comment

கடிதம் எழுத வேண்டிய தேவையில்லையென்பதுடன், மே மாதத்தில் இரண்டு விவாதங்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்தார்.

பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தலைவர்களுக்கு  இடையிலான இரண்டு விவாதங்களுக்கும் தாம் தயாராக இருப்பதாகவும், இதிலிருந்து தப்பியோடாமல் இந்த இரண்டு சவால்களையும் ஏற்றுக்கொள்ளுமாறும், விவாதத்துக்கு வருமாறும் தேசிய மக்கள் சக்திக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் 162ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய, ஒகந்தயாய மகா வித்தியாலயத்துக்கு வழங்கும் நிகழ்வு நேற்று (23) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் பாடசாலையின் பொருளாதார வல்லுநர்கள் மத்தியிலான விவாதத்துக்கு முடியாதெனக்  கூறுவது அவர்களின் பொருளாதார வல்லுநர்களால் நாட்டுக்கான சரியான பொருளாதார பார்வையை முன்வைக்க முடியாமையினாலா என்ற பிரச்சினை எழுகிறது. எனவே கடிதம் அனுப்பாமல் மே மாதம் இரு விவாதங்களுக்கும் வாருங்கள். அதேபோல் விவாதங்கள் நடத்துவது போலவே வெறும் வாய்வீராப்பு காட்டாமல் மக்களுக்கு சேவை செய்து காட்டுங்கள். பிரயோக ரீதியான தலைவர்களே நாட்டுக்கு தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.வீராப்பு பேச்சுகளால், பொய்களால் மக்கள் சலிப்படைந்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி பேச்சுக்கும், மக்கள் பணிக்கும் தயாராக இருப்பதால், அஞ்சாது விவாதத்துக்கு வருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.   முயற்சியாண்மைகளை உருவாக்கும் அறிவு பாடசாலை கல்வியிலும் வழங்கப்பட வேண்டும். பாடசாலை பருவத்திலிருந்தே முயற்சியாண்மை கல்வியும் புகட்டப்பட்டு ஒரு மில்லியன் தொழில்முனைவோரை உருவாக்க நாம் எமது ஆட்சியில் நடவடிக்கை எடுப்போம். இதற்கு தேவையான அபிவிருத்திகள், வளங்கள் மற்றும் நிதி வசதிகள் சலுகை விலையில் வழங்க நாம் நடவடிக்கை எடுப்போம். எமது நாட்டில் வாரத்தில் 365 நாட்களும் வாய்மொழிக் கல்வியாகவே புகட்டப்படுகிறது. இதனால் பிள்ளைகளுக்கும் நாட்டுக்கும் எதிர்காலம் இல்லை என்பதனால் கல்வியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்” எனத்   தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT