Monday, May 6, 2024
Home » காஸாவில் பாதிப்புற்ற சிறார்களுக்கு கல்முனை வலயத்திலிருந்து நிதியுதவி

காஸாவில் பாதிப்புற்ற சிறார்களுக்கு கல்முனை வலயத்திலிருந்து நிதியுதவி

by Gayan Abeykoon
April 24, 2024 9:49 am 0 comment

இஸ்ரேல் – காஸா யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சிறுவர்களுக்கு உதவுவதற்கு கல்முனை கல்வி வலயத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முன்வைத்துள்ளனர்.

அதற்கமைய கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் கல்வி அதிகாரிகள், கல்விசாரா ஊழியர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் சேகரிக்கப்பட்ட சுமார் 3128,500.00 ரூபா நிதி பாடசாலை அதிபர்களினால் நேற்றுமுன்தினம் வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீமிடம் கையளிக்கப்பட்டது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனை வழிகாட்டலுக்கமைய ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசாரா ஊழியர்கள் போன்றவர்களின் சொந்த நிதியிலிருந்து சேகரிக்கப்பட்ட இப்பணமானது, மாற்றுத்திறனாளி சிறுவர்களின் கல்வி அபிவிருத்தி மற்றும் அவர்களது இதர செலவுகளுக்கு பயன்படுத்துவதற்காக ஜனாதிபதி ஊடாக அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்நிதி சேகரிப்பின் போது கல்முனை கல்வி வலயத்திலுள்ள தமிழ் பாடசாலைகளும் பங்களிப்பு வழங்கியிருந்தமை பாராட்டத்தக்க ஒரு விடயமாகும்.

பெரியநீலாவணை விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT