Tuesday, April 30, 2024
Home » கோழைகள் போன்று விவாதங்களில் இருந்து தப்பி ஓடாதீர்கள்

கோழைகள் போன்று விவாதங்களில் இருந்து தப்பி ஓடாதீர்கள்

- எந்த விவாதத்திற்கும் நாங்கள் தயார்

by Prashahini
April 12, 2024 3:00 pm 0 comment

– எதிர்க்கட்சித் தலைவர் சோசலிசப் புரட்சியாளர்களுக்கு பகிரங்க சவால்

நாடு வங்குரோத்தியுள்ள வேளையில், நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை மக்கள் ஆணையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிலிருந்து எவராலும் தப்ப முடியாது என்றும், உலகில் உள்ள குறைந்த வளங்களை நாட்டுத் தலைவரின் சாமர்த்தியத்துடன் நமது நாட்டுக்கு எடுத்து வர வேண்டும். விவாதங்களும், வாதங்களும், தர்க்கங்களும்,கலந்துரையாடல்களும் நடக்க வேண்டும். முன்மொழிவுகள், பார்வைகள் மற்றும் வேலைத்திட்டங்களை முன்வைக்காமல் அவ்வாறான வளங்களைப் பெற முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சர்வதேச சமூகத்தின் தலைவர்கள் சந்திக்கும் போது தனிப்பட்ட சந்திப்புகள் கூட நடக்கின்றன. மொழித்திறன் இல்லை என்றால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறான திறமை இல்லாதவர்களுக்கு நாட்டின் தலைமைத்துவத்தை வழங்குவது மீண்டும் பாதாளத்தில் விழுவதை போன்றதாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டிற்கு உண்மையை வெளிப்படுத்தக்கூடிய சரியான சுட்டி, தூரநோக்கு, பயணமும் கொண்டவர் யார், அந்த பயணத்தை ஒரு வேலைத்திட்டமாக மாற்றி இந்நாட்டில் நடைமுறைப்படுத்த முடியுமானவர் யார் என்பது குறித்து விவாதம் நடத்த தான் எந்நேரத்திலும் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான விவாதங்களில் இருந்து தப்பி ஓட வேண்டாம் எனவும், பொருளாதார நெருக்கடி தொடர்பில் தனது பொருளாதார கொள்கை வகுப்பாக்க குழுவினரோடு மாற்று அணியின் பொருளாதார குழுக்களையும் ஒன்றிணைத்து விவாதம் நடத்துவோம் என நாகரீமகாக அழைக்கும் போது, கோழைகள் போன்று விவாதங்களில் இருந்து தப்பி ஓட வேண்டாம் என புரட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 154 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், மொனராகலை, வெல்லவாய, தனமல்வில, கெத்சிரிகம கனிஷ்ட வித்தியலாயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (11) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், ​​கல்லூரியின் நடனம், வாத்தியம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார். மேலும், கல்லூரியில் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் வனஜீவி அதிகாரி ஒருவரின் பிள்ளைக்கு மடிக்கணினி ஒன்றினையும் வழங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT