Tuesday, April 30, 2024
Home » Sunshine Holdings PLC க்கு புதிய தலைமைத்துவ அணி நியமனம்

Sunshine Holdings PLC க்கு புதிய தலைமைத்துவ அணி நியமனம்

by mahesh
April 10, 2024 11:16 am 0 comment

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி புதிய தலைமைத்துவ நியமனங்களை அண்மையில் அறிவித்துள்ளது. இதன்படி, குழுமத்தின் செயற்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களாக அருண தீப்திகுமார, மிச்செல் சேனாநாயக்க, கலாநிதி ரி. சயந்தன் மற்றும் சாந்த பண்டார ஆகியோரை சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நியமித்துள்ளது.

இந்த புதிய நியமனங்கள் குறித்து கருத்து தெரிவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம், “எமது குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களாக அருண தீப்திகுமார, மிச்செல் சேனாநாயக்க, கலாநிதி ரி. சயந்தன் மற்றும் சாந்த பண்டார ஆகியோரை நியமிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களின் அனுபவம், மூலோபாய திறன்கள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை சன்ஷைன் ஹோல்டிங்ஸின் வெற்றிக்கு முக்கியமானவை. அவர்களின் தலைமையின் மூலம், சன்ஷைன் ஹோல்டிங்ஸ், எமது அனைத்து பங்குதாரர்களுக்கும் சிறந்த சேவையை வழங்கும் ஒரு முன்னணி வணிகமாகத் முன்னேரிச் செல்லும் என்று நான் நம்புகிறேன்.” என தெரிவித்தார்.

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி அருண தீப்திகுமார, 2 தசாப்தங்களுக்கும் மேலாக தொழில் அனுபவமுள்ளவர் ஆவார். மேலும் அருண, அனைத்து துறைகளிலும் வெற்றிகரமான வணிக செயல்முறைகள் மற்றும் குழு தலைமைத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம் நிதித் தலைமைத்துவத்தில் உறுதியான சாதனை படைத்துள்ளார். அவர் பட்டய முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் இணை உறுப்பினராக உள்ளதுடன் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் B.Sc பட்டத்தையும் பெற்றுள்ளார். மேலும் பட்டய சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் பட்டதாரி மற்றும் இணை உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதான மனித மற்றும் நிறுவன தொடர்பாடல் அதிகாரியான மிச்செல் சேனாநாயக்க, Sunshine Consumer இன் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். பெருநிறுவனத்தில் 27 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட சேனாநாயக்க, 15 வருடங்களாக மனித வளத்துறையில் முன்னணியில் இருந்துள்ளார். அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முதுகலை முகாமைத்துவ நிறுவனத்தில் MBA (மனித வளம்) பட்டம் பெற்றவர் என்பதுடன் சர்வதேச பயிற்சியாளர்கள் சங்கத்தின் சான்றளிக்கப்பட்ட தொழில்முறை பயிற்சியாளரும் ஆவார்.

சன்ஷைன் ஹெல்த்கெயார் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி ரி. சயந்தன், Sunshine Medical Devices மற்றும் Lina Pharmaceutical Manufacturingஇன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக உள்ளார். 32 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், கலாநிதி சயந்தன் 2017 முதல் Sunshine Medical Devices மற்றும் Lina Pharmaceutical Manufacturingஇன் வெற்றிக்கு வழிகாட்டியுள்ளார். Asia e பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் தொடர்பில் கலாநிதி பட்டம் பெற்ற அவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் MBA பட்டமும் பெற்றுள்ளார். பட்டய சந்தைப்படுத்தல் நிறுவகத்தின் உறுப்பினராகவும் உள்ள கலாநிதி சயந்தன், இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் மற்றும் இலங்கை முகாமைத்துவ நிறுவனம் ஆகியவற்றின் அங்கத்துவத்தையும் பெற்றுள்ளார்.

சாந்த பண்டார, Sunshine Pharmaceuticals மற்றும் Healthguard Distribution இன் பிரதம நிறைவேற்று அதிகாரியாகப் பணியாற்றிய பின்னர் Sunshine Healthcare இன் பணிப்பாளர் சபையில் இணைந்து கொண்டுள்ளார். மருந்துத் துறையில் 26 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள சாந்த பண்டார 2011 ஆம் ஆண்டு முதல் மருந்து வணிகத்தில் முன்னணியில் இருந்து Sunshine Pharmaceuticals நிறுவனத்தை இலங்கையின் முன்னணி சுகாதார சேவை நிறுவனமாக மாற்றுவதற்கு உழைத்து வருகிறார். அவர் Healthguard Distribution ஐ நிறுவுவதற்கு தலைமை தாங்கினார், இது அனைத்து மருந்து நிறுவனங்களுக்கும் இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த மருந்தக வலையமைப்பிற்கும் மருந்துகளை வழங்குவதற்கு வசதியளிக்கும் ஒரு பெரிய விநியோக மாதிரியாகும். சாந்த பண்டார தற்போது இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனத்தின் (SLCPI) உப தலைவராக உள்ளார்.

Sunshine Holdings PLC தொடர்பாக
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி என்பது இலங்கைப் பொருளாதாரத்தின் சுகாதாரப் பாதுகாப்பு, நுகர்வோர் மற்றும் விவசாய வணிகத் துறைகளில் மூலோபாய முதலீடுகளுடன் பெறுமதியை சேர்ப்பதன் மூலம் “தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு” பங்களிக்கும் ஒரு கூட்டு நிறுவனமாகும்.

57 ஆண்டுகளுக்கு முன்பு 1967 இல் நிறுவப்பட்ட இந்த, குழுமம் 2,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது மற்றும் FY23 இல் ரூ. 51 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது. தற்போது Zesta Tea, Watawala Tea, Ran Kahata, Daintee, Milady, Healthguard Pharmacy மற்றும் Lina போன்ற இலங்கையின் முன்னணி வர்த்தக நாமங்களைக் கொண்டுள்ள நிறுவனமாகும். குழுமத்தின் வணிகப் பிரிவுகளில் Sunshine Healthcare Lanka, Sunshine Consumer Lanka மற்றும் Watawala Plantations PLC ஆகியவை அடங்கும், அவை அந்தந்தத் துறைகளில் முன்னோடிகளாக உள்ளன – அவற்றில் பெரும்பாலானவை 2023 இல் “Great Place to Work” சான்றிதழைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT