Monday, April 29, 2024
Home » தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்

தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்

by mahesh
April 10, 2024 8:00 am 0 comment

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவுனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் நேற்று தனது 98ஆவது வயதில் காலமானார்.

வயது மூப்பு காரணத்தால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஆர்.எம்.வீரப்பன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆர்.எம்.வீரப்பன் தனது 98ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது சென்னை தி. நகரிலுள்ள அவரது இல்லத்துக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை வைத்து ஏராளமான வெற்றி படங்களை தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., 1953இல் ‘எம்.ஜி.ஆர். நாடக மன்றம்’ மற்றும் ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் சினிமா நிறுவனம் ஆரம்பித்தார். இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இராம. வீரப்பன் நிர்வாக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இராம. வீரப்பன் 1963இல் ‘சத்யா மூவிஸ்’ என்ற பெயரில் சினிமா பட நிறுவனம் ஆரம்பித்தார். தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினராக 1956ஆம் ஆண்டில் இருந்தார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணைபொதுச்செயலாளராக பதவி வகித்த அவர், தகவல்மற்றும்இந்துசமயஅறநிலையத்துறைஅமைச்சராக கல்விமற்றும்இளைஞர்நலன்அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இரண்டு தடவைகள் 1977 – 1986வரை மாநில சட்ட மேலவை உறுப்பினராகவும், இரண்டு தடவைகள் 1986 இடைத்தேர்தலில், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் மற்றும்1991 இடைத்தேர்தலில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT