Saturday, April 27, 2024
Home » கசுனுக்கு பதில் அசித்த

கசுனுக்கு பதில் அசித்த

by Gayan Abeykoon
March 29, 2024 2:28 pm 0 comment

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் உபாதை காரணமாக விலகியுள்ள வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜித்தவுக்கு பதில் அசித்த பெர்னாண்டோ அழைக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மொத்தம் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணி 328 ஓட்டங்களால் வெற்றி பெறுவதற்கு உதவிய ராஜித்தவின் மேல் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் நாளை (30) சிட்டொக்ராமில் ஆரம்பமாகும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. அவர் உடல் தகுதிக்காக நாடு திரும்பவுள்ளார். இந்நிலையில் அவருக்கு பதில் 26 வயது வலது கை வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ அணியில் இடம்பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT