Sunday, April 28, 2024
Home » சமூகங்களை ஒன்றிணைத்து அக்கரைப்பற்றில் விசேட இப்தார்

சமூகங்களை ஒன்றிணைத்து அக்கரைப்பற்றில் விசேட இப்தார்

by Gayan Abeykoon
March 29, 2024 6:01 am 0 comment

சமூக ஐக்கியத்தை வலுப்படுத்தும் வகையில் ஒழுங்குசெய்யப்பட்ட “இப்தார்”   நிகழ்வு அக்கரைப்பற்று   “ஐநாபீச்வியு’ கார்டன் மண்டபத்தில் நடைபெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச செயலகம் சகோதர இனத்தவர்களின் முழுப்பங்களிப்புடன் இந்த இப்தார் நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.

பிரதேச செயலாளர் அஸ்-ஷேய்க் ரீ.எம் அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்திற்கு அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர்.வீ. ஜெகதீசன், இலங்கை இரானுவ 241ஆவது பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியார் எஸ்.டீ.என் பத்திரத்ன, ஓய்வு பெற்ற அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலை அதிகாரி டாக்டர் திருமதி சித்ரா நடராஜன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.அக்கரைப்பற்று அபூபக்கர் சித்தீக் அரபுக்கல்லூரி அதிபர் மௌலவி எம்.எம்.கலாமுல்லாஹ் (ரசாதி)  சிறப்புச்   சொற்பொழிவாற்றினார்.

காசா யுத்தத்தில்          பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு  நிதியும் சேகரிக்கப்பட்டது.இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகள் மூவருக்கும் புனித திருக்குர்ஆன் பிரதிகள் பிரதேச செயலாளர் அஸ்-ஷேய்க் ரீ.எம் அன்சாரால்  வழங்கப்பட்டது.

(அட்டாளைச்சேனை குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT