Sunday, April 28, 2024
Home » ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய சங்காபிஷேகம்

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய சங்காபிஷேகம்

by Gayan Abeykoon
March 29, 2024 1:00 am 0 comment

நாட்டுக்கோட்டை நகரத்தார் கம்பளை திருவருள் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி  திருக்கோவிலில் நிகழும் சர்வமங்களகரமான ஸ்ரீ சோபகிருது வருடம்  பங்குனி மாதம்  17ம் நாள் (30.03.2024) சனிக்கிழமை பஞ்சமி திதியும்  அனுச நட்சத்திரமும் மிதுன  லக்கினமும்  கூடிய  சித்தயோக சுபநந்நாளில்  ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ வள்ளி தேவசேனா  சமேத  ஸ்ரீ கதிர்வேலாயுத  சுவாமி மற்றும் ஏனைய பரிவார  மூர்த்திகளுக்கும் இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேக  அஸ்டோத்தர சத 108 சங்காபிஷேகம் நடாத்த   திருவருள்  கூடியுள்ளது.

காலை 9.00 மணிமுதல் விநாயகர் வழிபாடுடன் ஸ்ரீ கதிர்வேலாயுத  சுவாமிக்கும், ஏனைய  பரிவார  மூர்த்திகளுக்கும்  அபிஷேகம் நடைபெறும். பகல் 12.00 மணியளவில் மஹேஸ்வர பூஜையைத்  தொடர்ந்து  அன்னதானம் வழங்கப்படும்.மாலை 6.00 மணிக்கு நித்திய  பூஜை, விஷேட, வசந்த  மண்டப  அலங்கார  பூஜையைத்  தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க  அடியார்களின் “அரோஹரா” கோக்ஷத்துடன் ஸ்ரீ விநாயகப் பெருமான்,  ஸ்ரீ வள்ளிதேவசேனா சமேத ஸ்ரீ கதிர்வேலாயுத  சுவாமி உள்வீதி வலம் வந்து  அடியார்களுக்கு அருள் பாலிப்பார். நிகழ்வுகள் யாவும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ம.இனியன் உதயகுமரான் குருக்கள் தலைமையில் நடைபெறும்.

நாவலப்பிட்டி சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT