Saturday, April 27, 2024
Home » ஒருபால் திருமணத்தை நெருங்கும் தாய்லாந்து

ஒருபால் திருமணத்தை நெருங்கும் தாய்லாந்து

by Rizwan Segu Mohideen
March 28, 2024 10:16 am 0 comment

தாய்லாந்து தென் கிழக்கு ஆசியாவின் முதல் நாடாக ஒருபால் திருமணத்தை அங்கீகரிக்கப்படுவதை நெருங்கியுள்ளது.

தாய்லாந்து பாராளுமன்ற கீழவை ஒருபால் திருமணத்தை அங்கீகரிக்கும் திருமண சமத்துவ சட்டமூலத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. எனினும் அது சட்டமாவதற்கு முன் செனட் மற்றும் அரச ஒப்புதலை பெற வேண்டி உள்ளது. 2024 முடிவில் இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து பேசிய திருமண சமத்துவ குழுவின் தலைவரும் எம்.பியுமான டனுபோன் புனகன்டா, ‘இது சமத்துவத்தின் ஆரம்பமாகும். இது அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வாக இல்லாதபோதும் சமத்துவத்தின் முதல் படியாக அமையும்’ என்றார்.

இதில் திருமணம் என்பது ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையிலான கூட்டிணைவு என்பதற்கு பதில் தனிநபர் இருவருக்கு இடையிலான கூட்டிணைவு என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT