Saturday, April 27, 2024
Home » பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளராக நாமல்

பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளராக நாமல்

- அக்கட்சியின் நிறைவேற்று சபைக் குழுக் கூட்டத்தில் முடிவு

by Rizwan Segu Mohideen
March 28, 2024 8:11 am 0 comment

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (27) பிற்பல் அக்கட்சியின் நிறைவேற்று சபைக் குழுக் கூட்டம், கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றபேதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கூட்டத்தைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க, இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT