Saturday, April 27, 2024
Home » இலங்கை விமானப்படையின் சிறந்த விளையாட்டு வீர வீராங்கனைகள் கௌரவிப்பு

இலங்கை விமானப்படையின் சிறந்த விளையாட்டு வீர வீராங்கனைகள் கௌரவிப்பு

by Prashahini
March 27, 2024 4:12 pm 0 comment

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ விமானப்படை விளையாட்டு சம்மேளன தலைவர் என்ற வகையில் நேற்று (26) விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்ற விமனப்படையை சேர்ந்த சிறந்த விளையாட்டு வீர்ரகளை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு விருதுகளை வழங்கிவைத்தார்.

இதன்போது தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு சாம்பியன்ஷிப்களில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய நீர்ப்பந்து , குத்துச்சண்டை, பளு தூக்குதல், கிரிக்கெட், உயிர்காப்பு, படகோட்டல் ,சைக்கிள் ஓட்டுதல், கைப்பந்து, ஹாக்கி, கராத்தே, டேக்வாண்டோ, கேரம் மற்றும் துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய விமானப்படையின் விளையாட்டு வீரவீராங்கனைகள் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறந்து விளங்கிய நபர்களுக்கு விமானப்படை விளையாட்டு விளையாட்டு சம்மேளன தலைவரால் அங்கீகரிக்கப்பட்டு வெகுமதிகளும் வழங்கப்பட்டது.

மேலும், இதன்போது விமானப்படைத் தளபதியினால் சீனாவில் நடைபெற்ற 19வது உலக ராணுவ விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோப்ரல் நிமாலி பதவிநிலை உயர்வும் அளிக்கப்பட்டது. அவர் சார்ஜென்ட். நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டார். அத்தோடு மேலும் பல வீரவீராங்கனைகள் மற்றும் பயிற்றுப்பாளர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் விமானப்படை பதவி நிலை பிரதானி மற்றும் பணிப்பாளர்கள் ,பிரதிப் பண்ணிப்பாளர்கள் ,விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டு பிரிவின் தலைவர்கள், செயலாளர்கள், முகாமையாளர்கள் மற்றும் பலதரப்பட்ட விளையாட்டுத்துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீரவீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT