Home » TikTok செயலியை தடை செய்யும் பிரேரணை நிறைவேற்றம்

TikTok செயலியை தடை செய்யும் பிரேரணை நிறைவேற்றம்

- ஆதரவாக 352 வாக்குகள், எதிராக 65 வாக்குகள்

by Prashahini
March 15, 2024 12:04 pm 0 comment

TikTok செயலியை தடை செய்யும் முக்கிய பிரேரணையை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக 352 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

அமெரிக்காவில் உள்ள Tik Tok நிறுவனத்தின் சொத்துகளை 6 மாதங்களுக்குள் தடை செய்வது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதால், சுமார் ஆறு மாதங்களுக்குள் TikTok செயலி விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும், அவ்வாறு இல்லாத பட்சத்தில் அமெரிக்காவில் குறித்த செயலி தடை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணை இரு கட்சிகளின் வாக்கெடுப்பில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டாலும், அதனை சட்டமாக மாற்றுவதற்கு செனட் சபை அனுமதி வழங்கிய பின்னர், ஜனாதிபதி கையெழுத்திட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 170 மில்லியன் அமெரிக்கர்கள் TikTok செயலியை பயன்படுத்துகின்றனர்.

TikTok ஆனது 2012 இல் நிறுவப்பட்ட சீன தாய் நிறுவனமான ByteDance-க்கு சொந்தமானது.

பீஜிங்கை தளமாகக் கொண்ட நிறுவனம் கேமன் தீவுகளில் பதிவு செய்யப்பட்டு, ஐரோப்பா, அமெரிக்கா முழுவதும் அதன் கிளை அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

இந்த பிரேரணை இரு கட்சிகளின் வாக்கெடுப்பில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டாலும், அதனை சட்டமாக மாற்றுவதற்கு செனட் சபை அனுமதி வழங்கிய பின்னர், ஜனாதிபதி கையெழுத்திட வேண்டும்.

TikTok இன் தலைமை நிர்வாகியான Zhou Si Chu, நிறுவனம் தனது தரவை பாதுகாப்பாக வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், ஆயிரக்கணக்கான அமெரிக்க வேலை வாய்ப்புகளுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT