Tuesday, April 30, 2024
Home » திருகோணமலை –ஹம்பாந்தோட்டை பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்

திருகோணமலை –ஹம்பாந்தோட்டை பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்

by Gayan Abeykoon
March 1, 2024 1:00 am 0 comment

திருகோணமலை-−ஹம்பாந்தோட்டை   இலங்கை போக்குவரத்து  பஸ் சேவை நேற்று மீண்டும் ஆரம்பமாகியது.

திருகோணமலையிலிருந்து தினமும் இரவு 08.00 மணிக்கு புறப்படும் பஸ், மூதூர், ஓட்டமாவடி, மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, பொத்துவில், மொனராகலை மற்றும் கதிர்காமம் ஊடாக  ஹம்பாந்தோட்டையை அதிகாலை 04.30 மணிக்கு சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  ஹம்பாந்தோட்டையிலிருந்து இப்பஸ் தினமும் இரவு 7.00 மணிக்கு புறப்பட்டு கதிர்காமம், மொனராகல, சியம்பலாண்டுவ, பொத்துவில், அக்கரைப்பற்று, மட்டக்களப்பு மற்றும் மூதூர் ஊடாக  திருகோணமலையை அதிகாலை 05.30 மணிக்கு வந்தடையும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

(கிண்ணியா மத்திய நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT