Home » 18ஆவது வருடமாக தொலைக்காட்சி சந்தையில் முதலிடத்தில் திகழும் Samsung Electronics

18ஆவது வருடமாக தொலைக்காட்சி சந்தையில் முதலிடத்தில் திகழும் Samsung Electronics

by Rizwan Segu Mohideen
February 27, 2024 3:48 pm 0 comment

Samsung Electronics ஆனது  சர்வதேச தொலைக்காட்சி சந்தையில் அதன் தலைமை இஸ்தானத்தினை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது, ஆம், இத்தொழில்துறையின் உச்சியில் 18 வருடமாகத்  தனது  ஆட்சியினைப் பாதுகாத்து வந்திருக்கின்றது.

சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Omdia இன் கூற்றுப்படி, Samsung ஆனது 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய தொலைக்காட்சிச் சந்தையில் 30.1% பங்கினைக் கைப்பற்றியது,  இது 2006 முதல் தொழில்துறையின் தலைவராக அதன்  நிலையினை உறுதிப்படுத்தியுள்ளது.  Samsung நிறுவனம்  ஆனது அதன் மேம்பட்ட  QLED மற்றும் OLED Model களால் இயக்கப்படும் Premium மற்றும் அகண்ட  திரை தொலைக்காட்சி பிரிவுகள் தொடர்பாக  சந்தைத் திட்டமிடலுக்கு  மிகுந்த  முக்கியத்துவத்தினை அளித்தத்தன் மூலமாக இச்சாதனையானது எட்டப்பட்டுள்ளது.   

2017 ஆம் ஆண்டில் சந்தையில் அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்து, சமீபத்திய Neo QLED வடிவமைப்புகள் உட்பட Samsung இன் QLED TV  தொடரில்,  ஒட்டுமொத்த விற்பனையில் 40 Million Unit களை கடந்துள்ளது.  2023 ஆம் வருடத்தில் மட்டுமே, QLED வரிசையில் 8.31 Million Unit விற்பனையினைப் பதிவு செய்யதுள்ளது.

Premium தொலைக்காட்சி பிரிவில், குறிப்பாக 75 அங்குலங்களுக்கும் அதிகமான தொலைக்காட்சிகள் மற்றும் 2,500 டாலருக்கும் அதிகமான விலையில் Samsung ஆனது தனது  முன்னிலையினை  நிரூபித்துக்  காட்டியுள்ளது.  2,500 டாலருக்கும் அதிகமான விலையில் தொலைக்காட்சிகளின் விற்பனையில் 60.5% சந்தைப் பங்கினை Samsung நிறுவனமானது அடைந்துள்ளது மற்றும் 75 அங்குலங்களுக்கும் அதிகமான தொலைக்காட்சிகளின் விற்பனையில் 33.9% விற்பனைப் பங்கைக் கொண்டு முன்நிலையினை தக்கவைத்துள்ளது. கூடுதலாக, 98 அங்குல மாடல்களின் நிலையான அதிகரித்த  விற்பனையின் காரணமாக, Samsung ஆனது தொடர்ந்து 90 அங்குலங்களுக்கு மேல் தொலைக்காட்சிகள் பிரிவில் 30.4% சந்தை பங்கைக் கொண்டு முன்னணியில்த் திகழ்கின்றது. 

Ultra-Large மற்றும் High-End தொலைக்காட்சி சந்தையில் அதன் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, OLED துறையில் Samsung ஆனது கணிசமான வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளினைச் செய்துள்ளது. நிறுவனத்தின் OLED TV வரிசையில் 2023 ஆம் ஆண்டில் 1.01 மில்லியன் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, இது 22.7% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் விரிவாக்கப்பட்ட OLED வரிசையுடன், OLED துறையில் Samsung சந்தை பங்கு 2024 ஆம் ஆண்டில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Samsung Electronics  நிறுவனத்தின் Visual Display Business இன் பிரதானியும்  மற்றும் தலைவரான SW Yong, அவர்கள் கூறியதாவது ” Samsung இன் மீது எமது வாடிக்கையாளர்கள்  வைத்திருக்கக்  கூடிய அசைக்க முடியா  நம்பிக்கை மற்றும் பற்றுறுதி என்பவற்றினை நிரூபிக்கும் வகையில், சர்வதேசத் தொலைக்காட்சித் துறையில் 18 வருடங்களாக ஆதிக்கம் செலுத்துகின்ற  சக்தியாக அங்கீகரிக்கப்படுவதில் நாம் பெருமிதம் கொள்கின்றோம். தொழில்துறையினை  முன்னோக்கித் நகத்துவதில் எமது அர்ப்பணிப்பானது அதிசிறந்த  படத்தரத்தினை வழங்குவதையும் தாண்டி, அதிக பெறுமதியும்  மதிப்பும்மிக்க அனுபவங்களினையும் வழங்குகின்றது”.

CES 2024 இன் போது, Samsung Electronics இன் புரட்சிகர NQ8 AI Gen3 Processor ஐ அறிமுகப்படுத்தியது, இது AI திரை சகாப்தத்தின் விடியலைக் குறிக்கின்றது. நவீன  state-of-the-art chipset தொழில்நுட்பத்தில் இம் முன்னேற்றமானது Smart TV யினை மறுவரையறை செய்ய தயாராக உள்ளது, இது Tizen OS ஆல் இயக்கப்படும் மேம்பட்ட AI அம்சங்களினை உள்ளடக்கியது. AI திரைகளினை   smart TV கண்டுபிடிப்புகளில் முன்னணியில் நிலைநிறுத்துன்கிறது.

2024 ஆம் ஆண்டு, Samsung நிறுவனத்திற்கு மேலும் ஒரு புதுமையான ஆண்டாக அமையவு உள்ளது. Processor தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு திறன்களில் முன்னேற்றம் கண்டுள்ள Samsung ஆனது, வீட்டு பொழுதுபோக்குத் துறையில் புரட்சியினை ஏற்படுத்தி, தொலைக்காட்சித் துறையில் புதிய  திறன் மதிப்புத்  தரங்களை அமைக்கப் போகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT