Sunday, April 28, 2024
Home » சுதந்திர தினத்தை கொண்டாடியது Sun Siyam பாசிகுடா

சுதந்திர தினத்தை கொண்டாடியது Sun Siyam பாசிகுடா

by mahesh
February 14, 2024 8:00 am 0 comment

இலங்கையின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்குடன், மறுசீரமைக்கப்பட்டு அண்மையில் மீண்டும் திறந்து வைக்கப்பட்ட Sun Siyam பாசிகுடா, 76 ஆவது சுதந்திர தினத்தை 2024 பெப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடியது. கிழக்கு பிராந்தியத்தில் புதிய யுகத்தை ஆரம்பித்து, விருந்தினர்களுக்கு ஒப்பற்ற விருந்தோம்பல் அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றலுக்கும், ஹோட்டலின் கொடி ஏற்றலுக்கும் ஹோட்டலில் தங்கியிருந்த விருந்தினர்களை அழைத்து பங்கேற்கச் செய்திருந்தது. அவ்வேளையில் தேசிய கீதமும் இசைக்கப்பட்டிருந்தது. விருந்தினர்கள் மற்றும் அணியினர் தேநீர் விருந்துபசாரத்தில் பங்கேற்றிருந்ததுடன், இதர விருந்தினர்களுடன் உள்ளக உணவு வகைகளை அருந்தி மகிழ்ந்திருந்தது.

Studio Sixty7 உடன் கைகோர்த்து Sun Siyam பாசிகுடா மறுசீரமைப்பு செயற்பாடுகளைத் தொடர்ந்து 2023 நவம்பர் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இலங்கையில் கலாசார செழுமையை மேம்படுத்தி ஒப்பற்ற சொகுசை வழங்கும் வகையில் இது அமைந்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் 1.48 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்ததுடன், இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் 200,000 சுற்றுலாப் பயணிகள் சமூகமளித்திருந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) அறிவித்துள்ளது.

கிழக்கு பிராந்தியம் இதில் முக்கிய பங்காற்றியிருந்ததுடன், விருந்தினர்களுக்கு இலங்கையின் இரம்மியமான பகுதிகளையும், ஒப்பற்ற கரைகள், பரந்தளவு உணவு, ஆலயங்கள், வனஜீவராசிகள் மற்றும் கலாசார அம்சங்களை காணக்கூடியதாக இருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT