Sunday, April 28, 2024
Home » கூட்டணி அரசை நெருங்கும் நவாஸ்

கூட்டணி அரசை நெருங்கும் நவாஸ்

by damith
February 13, 2024 9:05 am 0 comment

பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் மற்றும் பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு திட்டமிடுவதாக அறிவித்துள்ளன.

இந்தத் தேர்தலில் தற்போது சிறை அனுபவிக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் முதலிடத்தை பிடித்த நிலையிலேயே இவர்கள் கூட்டணி அரசொன்றை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இம்ரான் கான் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட நிலையிலேயே அவரின் ஆதரவாளர்கள் இந்தத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டனர். இந்நிலையில் தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலின் இறுதி முடிவு நேற்று முன்தினமே வெளியான நிலையில் சுயேச்சை வேட்பாளர்கள் அதிகபட்சமாக 101 இடங்களில் வென்றனர். இவர்களில் 93 பேர் இம்ரான் கான் ஆதரவாளர்களாவர்.

இதனை அடுத்து நவாஷ் ஹரீப் கட்சி 75 இடங்களையும் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களையும் வென்றன. இந்த இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்தே 2022 இல் இம்ரான் கார் அரசை பதவி நீக்கியமை குறிப்பிடத்தக்கது.

நவாஸ் ஷரீபுக்கு பாகிஸ்தானின் பலம்மிக்க இராணுவத்தின் ஆதரவு இருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT