Saturday, May 4, 2024
Home » இலங்கைக்கான தூய்மையான கடற்படுகைகள் பயணம் ; உத்தியோகபூர்வ கூட்டாண்மை விழா

இலங்கைக்கான தூய்மையான கடற்படுகைகள் பயணம் ; உத்தியோகபூர்வ கூட்டாண்மை விழா

by mahesh
February 7, 2024 11:18 am 0 comment

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூக தொழில்முனைவோர் திட்டமான பிளாஸ்டிக்சைக்கிள் மற்றும் த பேர்ல் புரெக்டர்ஸ் (TPP), 2024 ஜனவரி 30 ஆம் திகதி ‘இலங்கைக்கான தூய்மையான கடற்படுகைகள் பயணம்’  உத்தியோகபூர்வ கூட்டாண்மை விழாவை நடத்தியது. இந்த விழா தெஹிவளையில் உள்ள பலகல வடக்குப் பாறையில் 21வது டைவ்களுடன் ஒழுங்குசெய்யப்பட்டதுடன் PADI சான்றளிக்கப்பட்ட தன்னார்வத் தொண்டர்களால் பராமரிக்கப்படும் டைவ்கள் மற்றும் துப்புரவு செயல்முறை, கழிவுகள் சேகரிக்கப்பட்டவுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளுக்காக மேற்கொள்ளப்பட்ட மீள்பாவனை மற்றும் மறுசுழற்சி முயற்சிகள் மற்றும் கூட்டாண்மை மூலம் இதுவரை அடையப்பட்ட நேர்மறையான தாக்கம் ஆகியவை பற்றிய விழிப்புணர்வு அமர்வை அழைப்பாளர்களுக்கு உள்ளடக்கியது.

அழைக்கப்பட்டவர்களில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA), மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA), சுற்றாடல் அமைச்சு மற்றும் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் பிளாஸ்டிக்சைக்கிளின் பிற தனியார் துறை பங்குதாரர்களான என்விரோ, கிளீன்டெக், கிளீன் சிட்டீஸ் மற்றும் ப்ளு ஓஷியன்ஸ் புரோகிரம் (CCBO), ரிசர்ச் ட்ரையங்கள் இன்ஸ்டிடுயூட் மற்றும் ஈகோ ஸ்பின்ட்ல்ஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டனர்.

கூட்டாண்மை குறித்து பேசிய ஜோன் கீல்ஸ் குழுமத்தின் நிர்வாக துணைத் தலைவரும், பெருநிறுவன நிதி, குழும வரி மற்றும் சமூக தொழில்முனைவோர் தலைவருமான நிஸ்ரீன் ரெஹ்மான்ஜி, ‘ஏப்ரல் 2023 இல், நாம் 21 டைவ்களை முடித்துள்ளோம், இதன் விளைவாக 1230 கிலோவுக்கு மேல் திருகோணமலை, மன்னார் மற்றும் கொழும்பு மாவட்டங்களில் மட்டும் பவளப்பாறைகளில் இருந்து மீன்பிடி வலைகள் மற்றும் பிற கைவிடப்பட்ட மீன்பிடி சாதனங்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் போன்ற பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது.  இந்த பயணத்தில் கூட்டாளராக இருப்பது ஜோன் கீல்ஸில் உள்ள தன்னார்வத் தொண்டர்களை நமது மதிப்புமிக்க கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதில் ஒரு பகுதியாக இருப்பதற்கு அனுமதித்து உள்ளது.

‘பிளாஸ்டிக்சைக்கிள்’ என்பது, இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கணிசமாகக் குறைப்பதில் வினையூக்கியாக விளங்கும் நோக்குடன் 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூக தொழில் முனைவோர் திட்டமாகும்.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (ஜேகேஎச்), கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப் பெரிய கூட்டு நிறுவனமாகும். இது 7 வகையான  பரந்துபட்ட தொழில் துறைகளில் 70 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயங்குகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள ஜோன் கீல்ஸ் குழுமம் 15,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதோடு, எல்.எம்.டி இதழால் கடந்த 18 ஆண்டுகளாக இலங்கையின்  ‘மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம்’ என்று தரப்படுத்தப்பட்டுள்ளது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவின் ‘நிறுவன அறிக்கையிடல் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை’யில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் முழு அங்கத்தவராகவும், ஐ.நா குளோபல் கொம்பக்டின் அங்கத்துவத்தையூம் கொண்ட ஜேகேஎச், ஜோன் கீல்ஸ் ஃபவூண்டேஷன் ஊடாக ‘நாளைக்கான தேசத்தை மேம்படுத்துதல்’ என்ற கூட்டாண்மை சமூக பொறுப்பை இயக்குகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT