Tuesday, April 30, 2024
Home » AICPA® & CIMA® தொழில் தினம் பெப்ரவரி 12 கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில்

AICPA® & CIMA® தொழில் தினம் பெப்ரவரி 12 கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில்

by Rizwan Segu Mohideen
February 6, 2024 3:14 pm 0 comment

எப்பொழுதும் பரிணாம வளர்ச்சி கண்டு வருகின்ற தொழில்ரீதியான வளர்ச்சியில், வெறுமனே தொழில் வாய்ப்புக்கள் மட்டுமல்லாது, பெறுமதிமிக்க நுண்ணறிவுகள், அர்த்தமுள்ள தொடர்புகள் மற்றும் புதிய தொழில் மார்க்கங்களை ஆராய்வதற்கான வாய்ப்புக்கள் அடங்கிய ஒரு முழுமையான அனுபவத்தையே அனேகமானோர் பெரும்பாலும் நாடுகின்றனர்.

2024 பெப்ரவரி 12 ஆம் திகதியன்று கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டல் லோட்டஸ் நிகழ்வு மண்டபத்தில் இடம்பெறவுள்ள AICPA® & CIMA® தொழில் தினம், தமது தொழில்களை மேம்படுத்த வேண்டும் என்ற அபிலாஷையைக் கொண்டவர்களுக்கு கலங்கரைவிளக்கமாக மாறவுள்ளது.

American Institute of CPAs (AICPA)) உடன் இணைந்து உலகளவில் அண்ணளவாக 700,000 வரையான AICPA மற்றும் CIMA அங்கத்தவர்கள், பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் மற்றும் தொழில்புரிபவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு சர்வதேச ஸ்தாபனமான Association of International Certified Professional Accountants இன் ஸ்தாபக உறுப்பினரே CIMA ஆகும்.

இந்நிகழ்வானது வெறுமனே ஒரு ஒன்றுகூடல் என்பதற்கு அப்பால், தொழில்ரீதியான முன்னேற்றம், புதிய தொழில் வாய்ப்புக்களை ஆராய்தல் மற்றும் முன்னணி நிறுவனங்கள் மற்றும் கூட்டு நிறுவனங்கள் குழுமங்களுடன் பெறுமதிமிக்க தொடர்புகளை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புக்களுக்கான பாதையைத் தோற்றுவிக்கின்றது. அண்மையில் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர பரீட்சையில் சித்தியெய்தியவரோ, பட்டப்படிப்பினை மேற்கொண்டு வருபவரோ அல்லது ஒரு பட்டதாரியோ என நீங்கள் எந்த நிலையில் இருப்பினும், பல்வகைப்பட்ட தொழில் தேவைகளை இந்நிகழ்வு பூர்த்தி செய்கின்றது.

தொழில்துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களால் பகிரப்படுகின்ற விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளை இந்நிகழ்வில் பங்குபற்றுபவர்கள் பெற்றுக்கொள்வதுடன், தொழில் வளர்ச்சிக்குத் தேவையான நவீன போக்குகள் மற்றும் மூலோபாயங்கள் தொடர்பான அறிவையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக இது வரை உறுதிப்படுத்தப்பட்ட பேச்சாளர்கள் மத்தியில் திரு. அப்துஸ் சமாத், CGMA பரீட்சையை நிறைவு செய்தவர், இணை ஸ்தாபகர் மற்றும் நிதிப் பணிப்பாளர், Crepe Runner; கௌஷலா அமரசேகர, ACMA (UK), CGMA, உதவிப் பொது முகாமையாளர் – சந்தைப்படுத்தல் தொடர்பாடல்கள், Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd; திரு. ஒஷான் ரணதுங்க, பிரதம வணிக அதிகாரி, Daraz; பிரஷானி இலங்கசேகர, ACMA (UK), CGMA, பிரதிப் பொது முகாமையாளர் – ESG குழுமம், Hayleys PLC; சிராந்தி கூரே, FCMA (UK), CGMA மற்றும் திரு. ஷானக ரபேல், FCMA (UK), CGMA, குழும பிரதம டிஜிட்டல் மற்றும் உருமாற்ற அதிகாரி, Stretchline Holdings Ltd ஆகியோர் அடங்கியுள்ளனர்.

தொழில்துறை வல்லுனர்கள், நிகழ்வில் கலந்துகொள்ளும் ஏனையவர்கள் மற்றும் தொழில்தருநர்களாக மாற வாய்ப்புள்ளவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்நிகழ்வில் கலந்துகொள்பவர்களுக்கு வாய்ப்புள்ளதுடன், இதன் மூலமாக தொழில்ரீதியான வலையமைப்பினை அவர்கள் கணிசமான அளவில் விஸ்தரித்துக்கொள்ள முடியும். மேலும், AICPA® & CIMA® உடன் இணைந்து பெருமதிப்புமிக்க நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற பல்வேறுபட்ட தொழில்வாய்ப்புக்கள் மற்றும் உள்ளக தொழில்பயிற்சி வாய்ப்புக்களையும் இதில் கலந்துகொள்பவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

வெற்றிக்கான நுழைவாயில்: இப்போதே பதிவு செய்துகொள்ளுங்கள்
தொழில்ரீதியாக தமது எதிர்காலத்தை சிறப்பாக செதுக்கிக்கொள்ள விரும்புகின்ற அனைவருக்கும், உருமாற்றத்திற்கான அனுபவத்திற்கு AICPA® & CIMA® தொழில் தினம் உத்தரவாதம் அளிக்கின்றது. உங்களுடைய தொழில் அபிலாஷைகளுக்கு வழிகாட்டியாக அமையக்கூடிய நிகழ்வில் உங்களது இடத்தை உறுதி செய்யும் வகையில், இலவச அனுமதியைப் பெற இப்போதே பதிவு செய்து கொள்ளுங்கள். (Link). தொழில்ரீதியான தமது இலட்சியங்களை நனவாக்கிக்கொள்ள இந்த நிகழ்வின் மூலமாக முதற்படியை எடுத்துவைக்குமாறு மாணவர்களும், அபிலாஷைமிக்க தொழில் புரிகின்றவர்களும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT