Saturday, April 27, 2024
Home » இந்திய முன்னாள் உதவித் தூதுவர் நடராஜனின் நூல் வெளியீடு இன்று

இந்திய முன்னாள் உதவித் தூதுவர் நடராஜனின் நூல் வெளியீடு இன்று

by gayan
February 3, 2024 10:45 am 0 comment

கண்டி – யாழ். உதவி உயர்ஸ்தானிகராலயத்தின் உதவித் தூதுவராக கடமையாற்றி ஓய்வுபெற்றுள்ள இந்தியாவைச் சேர்ந்த ஏ.நடராஜன் எழுதிய ‘பொரம் த விலேஜ் டு த குளோபல் ஸ்டேச்’ (அனுபவ வாழ்க்கை குறிப்பு) ஆங்கில நூல் வெளியீட்டு விழா இன்று (03) சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் 5.30மணிவரை பேராதனை ரெஸ்ட் ஹவுஸ் மண்டபத்தில் நடைபெறும்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கலந்து சிறப்பிக்கிறார். நூலின் முதல் பிரதியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக்கொள்வார்.

நிகழ்வில் வரவேற்புரையை சமூக செயற்பாட்டாளர் முத்தையாபிள்ளை ஸ்ரீகாந்தன், நூல் நயவுரையை பேராதனை பல்கலைக்கழக சட்டத்துறைப் பேராசிரியர் நெலும் தீபிகா உடகம, நூல் அறிமுகவுரையை பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சரத் பி.எஸ்.அபயக்கோன், பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் வி.மகேஸ்வரன் ஆகியோர் நிகழ்த்துவர். ஏற்புரையை நூலாசிரியரும் ஓய்வுபெற்ற உதவித் தூதுவருமான ஏ.நடராஜன் நிகழ்த்துவார்.

இந்நிகழ்வில் கண்டி தமிழ் வர்த்தக சங்கம், கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம், மத்திய மாகாண இந்து மாமன்றம், கண்டி இந்து இளைஞர் மன்றம், கண்டி தமிழ்ச் சங்கம், கண்டி முத்தமிழச் சங்கம், மாத்தளை மகாத்மா காந்தி சபை, மாத்தளை தமிழ் இலக்கிய மன்றம், மலையக கலை – கலாசார (இரத்தின தீபம்) சங்கம், கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், அசோகா குரூப் நிறுவனத் தவிசாளர் பி.டி.ஆர்.ராஜன், சன்ரயிஸ் பிஸ்கட் நிறுவன பணிப்பாளர் தொழிலதிபர் எஸ்.முத்தையா ஆகியோர் கலந்துகொள்வர்.

(இக்பால் அலி)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT