Tuesday, April 30, 2024
Home » Uber 2023 அறிக்கை: இலங்கையர் காரத்தை மிக விரும்புகின்றனர்!

Uber 2023 அறிக்கை: இலங்கையர் காரத்தை மிக விரும்புகின்றனர்!

by Rizwan Segu Mohideen
February 2, 2024 3:59 pm 0 comment

கடந்த ஆண்டில் Uber Eats Uber Eats தளத்தினூடாக நீங்கள் எத்தகைய உணவு ஆர்டர்களை மேற்கொண்டுள்ளீர்கள் என்ற விடயத்தை ஆழமாக அலசி ஆராய்ந்த நாம், இலங்கை மக்கள் எதிலும் காரத்தை விரும்புகின்றனர் என்பதைக் கண்டறிந்துள்ளோம். Uber Eats செயலியில் (Uber Eats app) கிடைக்கப்பெற்ற உணவு ஆர்டர்களுக்கான மிகவும் அதிக எண்ணிக்கையான விசேட குறிப்பு அறிவுறுத்தல்களை நோக்கும் போது அவை “காரமாக ஆக்கவும்” (make it spicy), “எக்ஸ்ட்ரா காரம்” (extra spicy), மற்றும் “காரம்” (spicy) என அமைந்துள்ளமை இலங்கை மக்கள் காரத்தை 🌶️ நேசிப்பதை நிரூபித்துள்ளது.

Uber Eats அடங்கா ஆசைகளின் அறிக்கை 2023 (Uber Eats Cravings Report 2023) ஆனது நாட்டில் மக்கள் எத்தகைய உணவுகள் மீது அடங்கா ஆசை கொண்டுள்ளனர் என்ற விடயங்களின் சுருக்கமான தொகுப்பாக அமைந்துள்ளதுடன், அவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக காணப்பட்ட உணவு வகைகள் மிகவும் ஆர்வமூட்டும் வெளிப்பாடுகளை எம்முன் கொண்டு வந்துள்ளன.

இலங்கை மக்களின் வாழ்வில் உள்ளார்ந்த அங்கமாக மாறியுள்ள அவர்களின் அபிமானம் பெற்ற உணவு மற்றும் மளிகைப்பொருட்கள் தொடர்பான இச்செயலி, அவர்களுக்கு மிகவும் தேவையான நேரங்களில் சேவையை வழங்கி வருகின்றது. ‘பிறந்ததினம்’ 🎂 என்ற குறிப்பான விநியோக அறிவுறுத்தல்களுடன் Uber Eats இல் 8,000 க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இனிப்பை விரும்புகின்றவர்களுக்காக பான்கேக், சொக்கிலேட் எக்லெயார் மற்றும் சொக்கிலேட் டோனட் போன்றவற்றை Uber Eats அதிகளவில் வழங்கியுள்ளதுடன், இலங்கை மக்களின் அபிமானம் பெற்ற இனிப்பு ஆகாரங்களாக அவை காணப்படுகின்றன. அத்துடன் முன்வைக்கப்பட்ட உணவு ஆர்டர்களில் கிட்டத்தட்ட அரைவாசி ஆர்டர்கள் ‘தயவு செய்து’ 🙏 என்ற வாக்கியத்தைக் கொண்டிருந்தமை இலங்கை மக்கள் எந்த அளவுக்கு கண்ணியமாக நடந்துள்ளனர் என்பதையும் புலப்படுத்துகின்றது.

கடந்த ஆண்டில் Uber Eats தளத்தினூடாக நீங்கள் எத்தகைய உணவு ஆர்டர்களை மேற்கொண்டுள்ளீர்கள் என்ற விடயத்தை ஆழமாக அலசி ஆராய்ந்த நாம், இலங்கை மக்கள் எதிலும் காரத்தை விரும்புகின்றனர் என்பதைக் கண்டறிந்துள்ளோம். ஊபெர் ஈட்ஸ் செயலியில் (Uber Eats app) கிடைக்கப்பெற்ற உணவு ஆர்டர்களுக்கான மிகவும் அதிக எண்ணிக்கையான விசேட குறிப்பு அறிவுறுத்தல்களை நோக்கும் போது அவை “காரமாக ஆக்கவும்” (make it spicy), “எக்ஸ்ட்ரா காரம்” (extra spicy), மற்றும் “காரம்” (spicy) என அமைந்துள்ளமை இலங்கை மக்கள் காரத்தை 🌶️ நேசிப்பதை நிரூபித்துள்ளது.

ஊபெர் ஈட்ஸ் அடங்கா ஆசைகளின் அறிக்கை 2023 (Uber Eats Cravings Report 2023) ஆனது நாட்டில் மக்கள் எத்தகைய உணவுகள் மீது அடங்கா ஆசை கொண்டுள்ளனர் என்ற விடயங்களின் சுருக்கமான தொகுப்பாக அமைந்துள்ளதுடன், அவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக காணப்பட்ட உணவு வகைகள் மிகவும் ஆர்வமூட்டும் வெளிப்பாடுகளை எம்முன் கொண்டு வந்துள்ளன.

இலங்கை மக்களின் வாழ்வில் உள்ளார்ந்த அங்கமாக மாறியுள்ள அவர்களின் அபிமானம் பெற்ற உணவு மற்றும் மளிகைப்பொருட்கள் தொடர்பான இச்செயலி, அவர்களுக்கு மிகவும் தேவையான நேரங்களில் சேவையை வழங்கி வருகின்றது. ‘பிறந்ததினம்’ 🎂 என்ற குறிப்பான விநியோக அறிவுறுத்தல்களுடன் Uber Eats ல் 8,000 க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இனிப்பை விரும்புகின்றவர்களுக்காக பான்கேக், சொக்கிலேட் எக்லெயார் மற்றும் சொக்கிலேட் டோனட் போன்றவற்றை ஊபெர் ஈட்ஸ் அதிகளவில் வழங்கியுள்ளதுடன், இலங்கை மக்களின் அபிமானம் பெற்ற இனிப்பு ஆகாரங்களாக அவை காணப்படுகின்றன. அத்துடன் முன்வைக்கப்பட்ட உணவு ஆர்டர்களில் கிட்டத்தட்ட அரைவாசி ஆர்டர்கள் ‘தயவு செய்து’ 🙏 என்ற வாக்கியத்தைக் கொண்டிருந்தமை இலங்கை மக்கள் எந்த அளவுக்கு கண்ணியமாக நடந்துள்ளனர் என்பதையும் புலப்படுத்துகின்றது.

குறும் தீனிகள் மீது இலங்கை மக்கள் கொண்டுள்ள ஆழமான ஆர்வம், சிக்கன் றோல், உழுந்து வடை மற்றும் ஃபிஷ் பற்றிஸ் ஆகியவற்றின் மூலமாக வெளிப்பட்டுள்ளதுடன், மக்கள் தமது குறும் பசியைப் போக்குவதற்கு நொறுக்குத்தீனியாக அவற்றையே அதிகளவில் கோரியுள்ளனர்.

உலகில் மிகப் பெரிய தேயிலை ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாகவுள்ள இலங்கையில், மிகவும் அபிமானம் பெற்ற பான வகையாக பால் தேநீரை விடவும் ஐஸ் கோப்பி முன்னிலை வகிக்கின்றமை மிகவும் ஆர்வமூட்டும் ஒரு வெளிப்பாடாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஸ்ட்ரோபெரி மொஜிடோ மற்றும் கப்பசினோ ஆகியன பிரபலமானவையாக காணப்படுகின்றன.

மிகவும் பிரபலமான உணவு வகைகளின் பட்டியலை நாம் நோக்கும் போது, நாம் எல்லோரும் அறிந்துள்ளவாறு,  இலங்கை மக்கள் அனைவருமே சோறை விரும்புகின்றனர் என்பது வெளிப்படையாகவுள்ளது. மிகவும் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகளை கருதுகையில் 5 க்கு 3 என்ற எண்ணிக்கையில் சோறை அடிப்படையாகக் கொண்ட பல்லாயிரக்கணக்கான ஆர்டர்களாக அவை காணப்படுகின்றன. ‘2023 உணவுப் பட்டியல் உரிமைத் தொகை’ அடிப்படையில் அதன் பட்டியல் பின்வருமாறு:

  • ஸ்பைசி சிக்கன் சப்மரைன்
  • சிக்கன் பர்கர்
  • நாசி கொரேங்
  • மிக்ஸ்ட் ஃபிரைட் ரைஸ்
  • சிக்கன் பிரியாணி

ஊபெர் ஈட்ஸ் செயலியில் ஆர்டர் செய்யப்பட்ட மளிகைப்பொருட்களைப் பொறுத்தவரையில் வீட்டில் சமைக்கும் உணவுகளுக்கான காய்கறி வகை மற்றும் பிரபலமான பானங்களுக்கான பால் ஆகியன கூடுதலான அளவில் காணப்பட்டன. ‘2023 மளிகைப்பொருட்கள் உரிமைத் தொகை’ அடிப்படையில் அதன் பட்டியல் பின்வருமாறு:

  • புத்தம்புதிய பால்
  • முட்டை
  • தக்காளி
  • சான்ட்விச் பாண்
  • கரட்

உள்நாட்டுக்கே உரித்தான உணவுகளும் பிரபலமான ஆர்டர்களாக காணப்பட்டன. அச்சாறு எனப்படுகின்ற இலங்கை ஊறுகாய் கடந்த ஆண்டில் 17,000 க்கும் மேற்பட்ட ஆர்டர்களைக் கொண்டிருந்தது. சிக்கன் கொத்து, ரோஸ்ட் சிக்கன் கொத்து மற்றும் சிக்கன் சீஸ் கொத்து என பல்வேறுபட்ட வடிவங்களில் மிகவும் கூடுதலாக ஆர்டர் செய்யப்பட்ட உணவாக கொத்து ரொட்டி காணப்பட்டது.    

ஃபிரைட் ரைஸ் மற்றும் பிரியாணி இடையே நீண்ட காலமாக நிலவி வந்த போட்டியும், குறைந்தபட்சம் கடந்த ஆண்டிலாவது முடிவுக்கு வந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் ஃபிரைட் ரைஸை விடவும் 20,000 கூடுதலான ஆர்டர்களை பிரியாணி கொண்டிருந்தது.

ஆர்டர்கள் முன்வைக்கப்பட்ட போது பதிவு செய்யப்பட்ட சில குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை கட்டாயமாக குறிப்பிட்டே ஆக வேண்டும். அவ்வாறு எமக்கு கிடைக்கப்பெற்ற சில தனித்துவமான அறிவுறுத்தல்கள் சில பின்வருமாறு:

  • தயவு செய்து சோற்றை கூடுதலாகவும், பெரிய சிக்கன் துண்டையும் இடவும் (Please put a lot of RICE and BIG chicken please) 
  • தயவு செய்து கோழியின் தொடையின் எடையை நிறுத்து அதனை எனக்கு கூற முடியுமா? நான் உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்ற வருகிறேன், இது 300 கிராம்களை விட அதிகமெனில் சிறப்பாக இருக்கும்  (Can you please weigh the chicken leg and let me know? I’m on a diet, it wud be amazing if it is above 300 grams)
  • இது உட்கொள்வதற்கு பசி ஆர்வமில்லாத நோயாளர் ஒருவருக்கானது. அவருக்கு பசியைத் தூண்டும் வகையில் உணவை தயாரிப்பதை போற்றுவேன் ( This is for a patient who doesn’t have an appetite to eat. Appreciate it if you can make it appetising)
  • இன்னும் முறியாமல் மோசமாக உள்ளது. தேநீருக்கு பதிலாக கோப்பியை அனுப்புவதைப் போற்றுவேன். முற்கூட்டியே நன்றி (Having a terrible hangover. Appreciate if you could send me coffee instead of tea. Thank you in advance)
  • தயவுசெய்து எக்ஸ்ட்ரா சீஸ் இடவும் (add extra chill paste please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please) 

உங்கள் அபிமானம் பெற்ற உணவுகளை உங்களிடம் கொண்டு வந்து தருகின்ற விநியோக கூட்டாளர்கள் எப்போதும் உங்கள் வதனங்களில் புன்னகையை தவழ விடுகின்றனர். இலங்கை எங்கிலும் இந்த அபிமானமும், போற்ற வேண்டும் என்ற எண்ணமும் கடந்த ஆண்டில் விநியோக கூட்டாளர்களுக்கு ரூபா 100,500,000 தொகை டிப்ஸ் அன்பளிப்பை சம்பாதிக்க வழிகோலியுள்ளது.    

ஆகவே இலங்கை மக்கள் தமது உணவில் கூடுதல் காரத்தை விரும்புவதுடன், தமக்கு கிடைக்கின்ற சிக்கன் துண்டின் அளவு மற்றும் சொக்கிலேட்டின் பங்கினை நேசிப்பதுடன், குறிப்பாக ஒரு கிண்ணம் சோற்றுடன் அவற்றை அனுபவித்து மகிழ்கின்றனர் என்பதை தற்போது நாம் அறிவோம்! உங்களுடைய அடங்கா ஆசைகள் எதுவாக இருப்பினும் நீங்கள் நேசிக்கும் வழியில் அவற்றை நாம் தொடர்ந்தும் வழங்குவோம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT