Monday, April 29, 2024
Home » கண்ணீர்ப்புகை, இறப்பர் தோட்டாக்களுக்கான தேவையற்ற செலவுகளை கல்விக்கு ஒதுக்குங்கள்

கண்ணீர்ப்புகை, இறப்பர் தோட்டாக்களுக்கான தேவையற்ற செலவுகளை கல்விக்கு ஒதுக்குங்கள்

- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திடம் கோரிக்கை

by Rizwan Segu Mohideen
January 31, 2024 3:50 pm 0 comment

பொதுமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது அரசாங்கம் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டது. இதற்கு அரசாங்கம் பெருமளவு பணத்தைச் செலவிட்டுள்ளது. இந்தப் பணத்தை பாடசாலைக் கல்வியை மேம்படுத்துவதற்கு ஒதுக்க முடியுமாக இருந்தால் பெரும் நலன் விளையும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

உயர் தரம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மற்றொரு சமூக சேவை நிறுவனம் மூலம் ஊதியம் வழங்கப்படும் நாட்டில், கண்ணீர்ப்புகை,தோட்டாக்கள் மற்றும் நீர்த்தாரைகளுக்குத் தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு பணம் செலவிடப்பட வேண்டுமா, இல்லை என்றால் ஆசிரியர் பற்றாக்குறையையும் வளப்பற்றாக்குறையையும் தீர்த்து கல்வித்துறையைக் கட்டியெழுப்புவது குறித்து சிந்திக்க வேண்டும் என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 73 ஆவது கட்டமாக,மாத்தறை திக்வெல்ல மின்ஹாத் தேசிய பாடசாலைக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (31) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச பயங்கரவாதம்,அரச மிலேச்சத்தனம், அரச வன்முறை,அரச கெடுபிடிகள் மூலம் ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்தை தடுத்து நிறுத்த முடியாது.220 இலட்சம் மக்களுக்காக வேண்டி,அமைதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் வீதியில் பேராட்டம் நடத்தினாலும், சட்டவிரோத அரசாங்கத்தின் சட்டவிரோத தாக்குதல்களுக்கு உட்பட வேண்டி ஏற்பட்டது.

மக்களால் தெரிவு செய்யப்படாத,மக்கள் ஆணை இல்லாத,சட்ட ரீதியான அங்கீகாரம் இல்லாத அரசாங்கமே இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.ஜனாதிபதி உட்பட தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணையில்லாமலயே ஆட்சியை நடத்தி வருகிறது.

கண்ணீர் புகை, குண்டாந்தடிகள்,பொலிஸ் மிரட்டல்,அரச பயங்கரவாதம் என்பவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக,நாட்டிலுள்ள 10126 பாடசாலைகளில் கற்கும் 41 இலட்சம் மாணவ மாணவிகளின் மனித மற்றும் அடிப்படை உரிமைகளில் கவனம் செலுத்துங்கள்.குறைபாடுகள்,எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து கனம் செலுத்துங்கள்.நாட்டின் 220 இலட்சம் மக்களுக்காக வேண்டி,உரத்து குரல் எழுப்பிய மக்களின் மனித உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசாங்கம் மீறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரச பயங்கரவாதத்திற்கு மட்டுமே இந்த அரசாங்கம் கெட்டித்தனம். இந்த அரசாங்கம்,வருடத்தின் 365 நாட்களும் அரச வன்முறை,அரச பயங்கரவாதம்,அரச மிருகத்தனத்தை பிரயோகித்து மக்களின் வாயை மூடச் செய்யும் விடயத்திலயே கெட்டித்தனம் காட்டி வருகிறது.

தெளிவாக,ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில்,கல்விச் சுதந்திரம் உட்பட அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்பட்டு, எந்த சவாலையும் எதிர்கொண்டு,உலகிற்கு ஏற்ற உயர்தர கல்வி முறையை ஸ்தாபித்து,வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கையை முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

ஐ.ம.ச. தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பேரணிக்கு நீதிமன்றங்களின் உத்தரவு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT