Monday, April 29, 2024
Home » சனத் நிஷாந்தவிற்கு எதிரான வழக்கு குறித்து பெப். 02 இல் தீர்மானம்

சனத் நிஷாந்தவிற்கு எதிரான வழக்கு குறித்து பெப். 02 இல் தீர்மானம்

- மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவிப்பு

by Rizwan Segu Mohideen
January 31, 2024 4:26 pm 0 comment

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான மனுக்கள் இன்று (31) சோபித ராஜகருணா, தம்மிக்க கணேபொல ஆகிய இருவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.

குறித்த வழக்கின் பிரதிவாதியான சனத் நிஷாந்த உயிருடன் இல்லாததால், அது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவிக்க அன்றையதினம் (02) வழக்கை விசாரணைக்கு எடுக்க இதன்பேபாது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்களை, இலங்கை நீதிமன்ற அதிகாரிகள் சங்கம் மற்றும் சட்டத்தரணிகளான பிரியலால் சிறிசேன, விஜித குமார ஆகியோர் தாக்கல் செய்துள்ளது.

கடந்த ஜனவரி 25ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில், இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பாளரான பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சனத் நிஷாந்தவின் பூதவுடல் மலர்ச்சாலையிலிருந்து புத்தளம் ஆரச்சிக்கட்டுவவிற்கு…

சனத் நிஷாந்தவின் பாதுகாப்பாளர் சார்ஜென்டாக பதவி உயர்வு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT