Saturday, April 27, 2024
Home » சனத் நிஷாந்தவின் பாதுகாப்பாளர் சார்ஜென்டாக பதவி உயர்வு

சனத் நிஷாந்தவின் பாதுகாப்பாளர் சார்ஜென்டாக பதவி உயர்வு

- நஷ்டஈடாக அவரது குடும்பத்திற்கு ரூ. 15 இலட்சம் பணம்

by Rizwan Segu Mohideen
January 27, 2024 10:49 am 0 comment

– பிரிவில் இணைந்தது முதல் சனத் நிஷாந்தவிற்கே பாதுகாப்பு
– அவருடனேயே பரிதாபமாக மரணம்

விபத்தில் பலியான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுடன் பயணித்து மரணமடைந்த, அவரது பாதுகாப்பாளரான பொலிஸ் கான்ஸ்டபிள் ஜே.ஏ. அநுராத ஜயக்கொடி (72542) சார்ஜென்ட் நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து இடம்பெற்று மரணமடைந்த தினமான ஜனவரி 25ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், பதில பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனினால் இந்த பதவி உயர் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச பரிபாலன சுற்றறிக்கை இலக்கம் 22/93 இற்கு அமைய குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவகலம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த பொலிஸ் கான்டபிளின் குடும்பத்திற்கு நஷ்டஈடாக ரூ. 15 இலட்சம் பணமும் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (25) அதிகாலை கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் R 11.01 கிலோமீற்றர் மைல்கல் அருகில், கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் ரக வாகனம், அதே திசையில் அதற்கு முன்னால் சென்ற கொள்கலன் வாகனத்துடன் மோதி, பின்னர் பாதுகாப்பு வேலியில் மோதி இவ்விபத்து ஏற்பட்டிருந்தது.

குறித்த விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் கான்ஸ்டபிள் அநுராதா ஜயக்கொடி ஆகியோர் உயிரிழந்தனர்.

சம்பவத்தில் ஜீப் ரக வாகனத்தை செலுத்திய சாரதி ராகமை வைத்தியசாலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டில், பெலிசறை நீதவான் நீதிமன்றினால் அவருக்கு எதிர்வரும் பெப்ரவரி 05 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

சனத் நிஷாந்தவின் பூதவுடல் மலர்ச்சாலையிலிருந்து புத்தளம் ஆரச்சிக்கட்டுவவிற்கு…

அதிகாலை விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT