Home » மன்னார் கடற்பரப்பிற்குள் நுழைந்த 18 இந்திய மீனவர்கள் கைது

மன்னார் கடற்பரப்பிற்குள் நுழைந்த 18 இந்திய மீனவர்கள் கைது

- 2 ட்ரோலர் படகுகளும் கடற்படையினரால் மீட்பு

by Prashahini
January 17, 2024 8:09 am 0 comment

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் நேற்று (16) மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கடல் பகுதியை அண்மித்த கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து இரண்டு ட்ரோலர் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்களே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைதான 18 கடற் மீனவர்களும் அவர்கள் பயன்படுத்திய 2 ட்ரோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு கொண்டுவரப்பட்டன.

அதன்பின்னர் 18 மீனவர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணைகளின் பின்னர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் இன்று (17) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

குறித்த இந்திய மீனவர்களின் படகுகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான கிலோ எடை கொண்ட குஞ்சு மீன்கள் மீட்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT